(Reading time: 11 - 22 minutes)

 " உட்காருங்க, மூணு பேரும்! மேலே படிங்க!"

 அண்ணன் பெற்றோரைப் பார்க்க, அவர்கள் தலையசைக்க, மேலே படித்தான்.

 "உத்தியோகம்: கம்ப்யூடர் இன்ஜினீயர், மாத சம்பளம் இரண்டாயிரம் அமெரிக்கன் டாலர் ( ரூபாய் ஒன்றரை லட்சம்)"

 மூவர் முகத்திலும் ஆனந்தம் கொப்பளித்தது.

 அவர்கள் தலையசைக்க, அண்ணன் மேலே படித்தான்.

 "படிப்பு: டாக்டரேட் இன் இஞ்சினீயரிங்"

 மறுபடியும் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்தனர்.

 " வசிக்கும் இடம்: நியூயார்க், அமெரிக்கா."

 " அப்பா! பிடித்தாலும் புளியங்கொம்பாத்தான் பிடிச்சிருக்கா, தங்கச்சி! மேலே படிக்கிறேன்.

 வயது: முப்பத்தைந்து"

மூவரின் முகமும் இருண்டது!

 " மேலே படி, அண்ணா!"

 அண்ணன் கையிலிருந்த பேப்பரை கீழே வீசி எறிந்தான்.

 பெற்றோரும் கோபமுடன் எழுந்தனர்.

 " உங்க எதிர்ப்பை முழுவதும் படித்து முடிச்சபிறகு காட்டுங்க, உட்காருங்க!"

 அவளே, தரையில் கிடந்த பேப்பரை கையில் எடுத்து, படித்தாள்.

 " உயரம்: 5'3"

 " நிறுத்து, நிறுத்து! உன்னைவிட குள்ளமா? வேண்டாம், வேண்டவே வேண்டாம்" என அண்ணன் அலறினான்!

 " அண்ணா! பொறுமை! பொறுமை! என்னை முழுக்க படிக்கவிடு.......

 குடும்பம் வசிப்பது: சென்னை

 தந்தை: திரு ராமானுஜம் எம்.ஏ.பி.எல், வழக்கறிஞர்

 தாய்: மார்கரெட் படிப்பு:எம்.லிட். கல்லூரி விரிவுரையாளர்

 உடன் பிறந்தோர்: இளைய சகோதரி, பெயர் மங்களம், வயது முப்பது, படிப்பு: கெமிகல் இஞ்சினீயரிங் டாக்டரேட். உத்தியோகம்: டைரக்டர், மார்வெலஸ் ஆயில் கம்பெனி, நியூயார்க், அமெரிக்கா.

இன்னும் திருமணமாகவில்லை. இருவருக்குமே பொருத்தமான சைவ வரனையே எதிர்பார்க்கிறோம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.