(Reading time: 11 - 22 minutes)

 " அண்ணா! நம்ம அம்மாவைவிட, அப்பா எத்தனை வயது மூத்தவர்னு கேளு! இதே பத்து வயது தான்! அவங்க என்ன சுகப்படலையா? நாம்தான் எந்த உடற்குறையும் இல்லாம வாழலையா? நமக்கொரு நீதி, மற்றவங்களுக்கு ஒரு நீதியா? சொல்லுங்க!"

 மூவரும் தலை குனிந்தனர்.

 " அடுத்தது, மதம்! சாலமன் என்கிற பெயரை வைத்து, அவனை வேறு மதம்னு விரோதமா பார்க்கிறீங்களே, அவன் தங்கை பெயரை பார்த்தீங்களா? 'மங்களம்'! அவனோட அப்பா பெயர் 'ராமானுஜம்'! அழகான வைஷ்ணவப் பெயர்! அவரோ, அவர் மகளோ மதம் மாறலை! அதேபோல, அவனோட அம்மாவும் அவனும் மதம் மாறலை! அவங்க அவங்க மதம் அவங்க அவங்களுக்கு! அதனாலே எந்தப் பிரிவினையோ, சண்டையோ கிடையாது, நாலு பேரும் சுத்த சைவம்! நான்கூட சில சமயம் முட்டை சாப்பிட்டிருக்கிறேன், வங்காளத்திலுள்ள சுத்த பிராமணர்கள்கூட மீன் சாப்பிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன், யோசனை பண்ணுங்க!

 எனக்கொண்ணும் அந்தப் பையன்மீது காதல், கத்திரிக்காயெல்லாம் கிடையாது, குடும்பமே நிறைய படித்து கண்ணியமாக கௌரவமாக வசதியா வெளிநாட்டிலே வாழறாங்க, இவை எல்லாவற்றையும்விட, முக்கியமா,

அம்மா! ஒரு விஷயத்தை நீ மறக்கக்கூடாது, அண்ணன் ஏன் இதுவரையிலும் கல்யாணம் செய்துக்காமல் இருக்காரு? என் கல்யாணம் முடிந்தபிறகுதான், தனக்கு கல்யாணம்னு காத்திருக்காரு அதனாலே, அவரு வயசு அதிகமாகி இப்ப முப்பத்துமூணு ஆயிடுத்து, சாலமனுக்கு வயசு அதிகம்னு சொன்னால், அது அண்ணனுக்குப் பொருந்தாதா?

 இப்பல்லாம், யாரும் முப்பது வயதுக்கு முன்னே கல்யாணத்தைப் பற்றி நினைக்கறதேயில்லை! ஏன்னா அவங்க நிறைய படிக்கிறாங்க, டாக்டரேட் படித்து முடிக்கறதுக்குள்ளே முப்பது வயது ஆயிடுது, நல்லவேளை, சாலமன் தங்கைக்கும் அண்ணனுக்கும் மூணு வயதுதான் வித்தியாசம்.

 அப்பா! அம்மா! முன்பெல்லாம் இந்தியனின் சராசரி ஆயுள், அறுபது வயதுக்கும் கீழே இருந்தது, இப்ப நிறைய பேர் எண்பது, தொண்ணூறு, நூறு வயசு வாழறாங்க! அதனாலே, வாழ்க்கையிலே கல்யாணம், குழந்தை பெற்றுக்கொள்வது, எல்லாமே தள்ளிப் போகுது, தவிர, முன்பு போல பி.ஏ. படிப்போட நிறுத்தாம, எல்லாரும் அதுக்கும் மேலே நிறைய படிக்கிறாங்க, சிங்கிள் டிகிரிக்கு இப்ப மதிப்பே இல்லை, டபுள் டிகிரி, தடுக்கி விழுந்தால் ஒரு டாக்டரேட்டை பார்க்கிறோம், அப்பத்தான் நல்ல வேலையே கிடைக்கிறது, நிறைய சம்பளத்தோட! விலைவாசி விஷம்போல ஏறிக்கிடக்கிறதனாலே, நிறைய சம்பளம் கிடைச்சாத்தான் குடும்பம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.