(Reading time: 11 - 22 minutes)

 எம்மதமும் சம்மதம்!

 எனது குடும்பத்தில் அனைவரும் சுத்த சைவம்!

 ஜாதகப் பொருத்தம் தேவையில்லை.

 பெண் எடுத்து பெண் கொடுக்க விரும்புகிறோம். திருமணமானபிறகு, நால்வரும் சேர்ந்து அமெரிக்காவில் வசிக்கலாம்.

 மேற்கொண்டு தொடர்பு கொள்ள, கீழே என் தந்தையின் சென்னை விலாசத்தையும் செல் நம்பரையும் தந்திருக்கிறேன்.

 வரதட்சணை சட்டவிரோதம். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள்."

 படித்து முடித்துவிட்டு, தங்கச்சி அண்ணனைப் பார்த்து சிரித்தாள்.

 " அண்ணே! உன் அருமை தங்கச்சியை நீயும் என் ஆருயிர் அண்ணனை நானும் பிரியாமல் வாழத்தான், இதற்கு முதல் மார்க் கொடுத்தேன். மற்ற நெருடல்கள், இடைவெளிகள் எல்லாவற்றையும் தூக்கி எறிவோம். அப்பா, அம்மாவும் நம்மைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் தான், எனக்குத் திருமணமே நடக்கும். இல்லையெனில், என்றும் நான் கன்னிதான்!"

 அவள் எழுந்து போய்விட்டாள்.

 அண்ணன் தியாகு தங்கச்சியின் பாசத்தை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தான். பெற்றோரும் தான்!

 அண்ணன் தியாகுவைப் பார்த்து, அப்பா சிவராமன் " டேய்! ஒரு ஒற்றுமை பார்த்தியா? சாலமனும் உன்னைப் போலவே, தன் தங்கையின்மீது மிக்க பாசமுள்ளவனாகத் தெரிகிறான்......"

 " அது சரிப்பா! எனக்காக, தங்கச்சி, தன்னைவிட பத்து வயது மூத்தவனை கணவனாக ஏற்பது தப்பில்லையா?"

 " ஆமாம்டா! அந்த விஷயம் கொஞ்சம் உறுத்துது!"

 " கொஞ்சமில்லே, நிறையவே! இதப் பாருங்க, அப்பாவும் பிள்ளையும் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டால்கூட, பெற்றவள் நான், என் மகளை ஒருநாளும், மதம் விட்டு மதம், தவிர பத்து வயது மூத்தவனுக்கு கல்யாணம் செய்து தரமாட்டேன்., தவிர பையன் நம்ம பொண்ணைவிட குள்ளம், மூணு இஞ்ச்......."

 உரக்கப் பேசிவிட்டு, அவள் இடத்தை காலி செய்தாள்.

 தந்தையும் மகனும் அங்கேயே அமர்ந்து தீவிரமாக யோசித்தார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.