(Reading time: 14 - 28 minutes)

ஒரு விஷயம்! நீ கிழிந்த, கலர் போன, சேலைகளை கட்டிக்கிட்டு வந்து நிக்காதே! அவனுக்குப் பிடிக்காது! என் பழைய நல்ல சேலைகளை தரேன், பளிச்சுனு அதை கட்டிக்கொண்டு வா, சரியா?"

 வள்ளி அடைந்த மகிழ்ச்சிக்கு கேட்கவேண்டுமா?

 " டேய் பாபு! லோகு! உங்களுக்கும் சொல்லிட்டேன், ஒழுங்கா நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி, நீங்களும் சீனுமாதிரி மேல்படிப்புக்கு அமெரிக்கா போய் டாக்டரேட் பட்டம் வாங்கினால்தான், செத்துப்போன உங்கப்பாவின் ஆத்மா சாந்தி அடையும். அவருக்கு, தன் பிள்ளைகள் மூன்றும் தன்னைப்போலவே படித்து மேதாவிகளாக வரணும்னு கொள்ளை ஆசை!"

 சீனு வந்து சேருகிற நாள் நெருங்க நெருங்க, அவள் பதட்டமும் அதிகரித்தது!

 வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும், துணிமணிகளை மடித்து பீரோவில் வைப்பதிலும், படுக்கையில் போர்வையை, தலையணை உறைகளை, பெட் ஷீட்டை புதிதாக மாற்றுவதிலும் அதிக நேரம் செலவிட்டாள்.

 சீனு வர ஃபிளைட் எத்தனை மணிக்கு அமெரிக்காவிலிருந்து கிளம்புகிறது, எந்த எந்த இடங்களில் ஃபிளைட் மாறுகிறான், இறுதியில் எத்தனை மணிக்கு அவன் பயணிக்கிற விமானம், சென்னை வந்தடைகிறது என்று தன் டயரியில் குறித்துக் கொண்டாள்.

 " பாபு! சீனு இப்ப அங்கிருந்து கிளம்பியிருப்பான்! பன்னிரண்டு மணி நேரத்திலே லண்டன் ஏர்போர்ட் வந்து சேர்ந்துடுவான், அங்கே நாலு மணி நேர வெயிட்டிங்! பிறகு அங்கிருந்து கிளம்பினால், மதியம் ரெண்டு மணிக்கு சென்னையில் வந்து இறங்கிடுவான், பேகேஜ் க்ளியரன்ஸ்தான் கொஞ்சம் டயமாகும், எல்லாம் நாற்பது நிமிஷங்களிலே முடிஞ்சி, கரெக்டா ரெண்டு நாற்பதுக்கு வெளியே வந்துடுவான், வந்ததும் உங்களைத்தான் தேடுவான், நீயும் லோகுவும் அவனை ரிசீவ் பண்ணி, அவன் பேகேஜ்களை வாங்கிண்டு, டாக்சியிலே ஏற்றி, அவனை பின்சீட்லே உட்கார வையுங்க! இதுக்கெல்லாம் இருபது நிமிஷத்துக்கு மேலே ஆகாது, ஏர்போர்ட்டிலே இருந்து டாக்சி மூணு மணிக்கு கிளம்பினால், முக்கால் மணி நேரத்திலே வீடு வந்து சேர்ந்துடுவான். நான் வாசலிலேயே ஆரத்தியுடன் காத்துக் கொண்டிருப்பேன், குழந்தைக்கு ஆரத்தி எடுத்து அவன் வலதுகாலை எடுத்து வைத்து வீட்டுக்குள்ளே நுழைந்தால்தான் திருஷ்டி கழியும். எவ்வளவு பெரிய சாதனை பண்ணிட்டு வரான், மற்றவங்க கண் பட்டுவிடுமோனோ? வீட்டுக்குள் நுழைஞ்சதும், 'அம்மா'ன்னு ஓடிவந்து என்னை கட்டிண்டு முத்தம் கொடுப்பான். எனக்கும் அவனை பார்த்ததும், அழுகை வந்துடும், ஆனந்தக் கண்ணீர்! இந்தக் காட்சியைப் பார்க்க, அவன் அப்பா இல்லையேங்கற சோகம் ஒருபக்கம் நெஞ்சிலே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.