(Reading time: 14 - 28 minutes)

 ஃபிளைட் கரெக்டா இரண்டு மணிக்கு இறங்கிவிட்டது.

 இருபது நிமிடங்களில் சீனு அண்ணனின் தலையும் தெரிந்தது!

 " லோகு! யாரோ ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணோட, சிரித்துப் பேசிண்டு வர்றது, அண்ணன்தானே!"

 "ஆமாம்! ஃபிளைட்டிலே, கூட வந்தவங்களா இருக்கும்...."

 அதற்குள் சீனு, தம்பிகளைப் பார்த்துவிட்டு கையசைத்தான், சிரித்துக்கொண்டே!

 தம்பிகள் இருவரையும் இறுக கட்டியணைத்து முத்தமிட்டுவிட்டு, அருகில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம், தனது தம்பிகளை அறிமுகப்படுத்தினான்.

 " அண்ணே! அம்மா உனக்காக காத்துக்கிட்டிருக்காங்க, கிளம்பலாமா?"

 " பாபு! (அந்தப் பெண்ணை காட்டி) இவங்களை நல்ல ஓட்டல்லே தங்கவைச்சிட்டு, நானும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு, எங்க ரெண்டு பேருக்கும் நல்ல பசி, நானே வீட்டுக்கு வரேன், நீங்க வீட்டுக்குப் போய், அம்மாவிடம் நான் நாலுமணிக்குள்ளே வந்துடுவேன்னு சொல்லிடுங்க! நீங்க கிளம்புங்க!"

 " அண்ணே! வந்து...அம்மா உனக்காக காலையிலிருந்து சாப்பிடாம காத்திருக்காங்க......"

 " அதுதான் சொல்றேன், லேட் பண்ணாம நீங்க வீட்டுக்குப்போய் அம்மாவும் நீங்களும் சாப்பிடுங்க! போங்க!" என விரட்டிவிட்டு அந்தப் பெண்ணுடன் நகர்ந்தான்.

 வேறுவழியின்றி, தம்பிகள் வீடு திரும்பினர்.

 தெருமுனையிலேயே அம்மாவின் தலையை வீட்டுவாசலில் பார்த்துவிட்டு, தங்களுக்குள் உடைந்துபோயினர்.

 அவளிடம் என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என தெரியாமல், விழித்தனர்.

 காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை!

 தலையை தொங்கப் போட்டவாறு வரும், தன் இரண்டு பிள்ளைகளைப் பார்த்த தாய், " என்னடா? சீனு வரலே?" என்று கேட்டதற்கு, இருவரும் திக்கித் திணறி, நடந்ததை தெரிவித்தனர்.

 அந்த வினாடியிலிருந்து அந்த வீட்டில் கப்பியிருந்த சோகத்தை சொற்களால் தெரிவிக்கவே முடியாது.

 மூவரும் சாப்பிடப் பிடிக்காமல், சுருண்டு படுத்திருந்தனர்.

 சரி, நான்கு மணிக்கு அண்ணன் வந்ததும், அம்மா கொஞ்சம் கொஞ்சமாக சமாதானம் ஆகிவிடுவாள் எனும் நம்பிக்கையில் இருவரும் வாசற்புறத்தின்மீது விழி வைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.