(Reading time: 7 - 14 minutes)

 "அதுவா....வந்து.....ரெண்டு பேரும் காலேஜ் படிச்சிருக்காங்க, எப்படி! கரெக்டா சொல்லிட்டேன இல்லே?"

 " போதுமே, அசடு வழியுதே! அவங்களுக்கு காலாகாலத்திலே, கல்யாணம் செய்துவைக்க வேண்டியது, பெற்றவங்க நம்ம பொறுப்புங்க!"

 " கண்ணம்மா! அதெல்லாம் அந்தக் காலம்! இது இருபத்தோறாம் நூற்றாண்டு! அவங்க கல்யாணத்துக்கு நமக்கு அழைப்பு வந்தாலே, பெரிய விஷயம்! உட்கார், சொல்றேன்!

 நம்ம காலத்திலே முதல்லே, ஜாதகப் பொருத்தம் பார்ப்பாங்க, பிறகு பெற்றவங்க கூடிப் பேசுவாங்க, பிறகு பெண்பார்க்கும் படலம், வரதட்சிணை விவகாரம், இப்படி எல்லாம் முடிந்து நிச்சயதார்த்தம், பிறகு கல்யாணம்!

 இப்ப எப்படி தெரியுமா? பெண்ணே தனக்குப் பொருத்தமான பையனை செலக்ட் பண்ணி, அவனோட ஆறுமாசம், ஒரு வருஷம் பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிப்பாங்க, சரி, கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவு பண்ணி, அவங்களே அந்தக் கல்யாணத்தை எங்கே, எப்படி, நடத்துவதுங்கிறதை விவரமாப் பேசி, முடிவு பண்ணி, செலவுக்கு பெற்றவங்களிடம் எதையும் எதிர்பார்க்காம, அவங்களே நாள், இடம், எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி, முதல்ல எல்லாருக்கும், 'சேவ் யுவர் டேட்'னு தேதியை அறிவிப்பாங்க, அதற்கு ஒரு மாசம் கழித்து, இன்விடேஷன் அனுப்புவாங்க, அதிலே மணமகனும் மணமகளும் அழைக்கிறதுபோல வாசகம் இருக்கும், அதிலே மண்டபம், தேதி உறுதிப்படுத்துவாங்க, அந்த தேதிக்கு ஒரு வாரம் முன்பே கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணுவாங்க நண்பர்களை அழைத்துக் கொண்டு போய்....பெற்றவங்களுக்கு ஒரு வேலையும் தராம, கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் செய்யுங்கன்னு சொல்வாங்க, ..........."

 " கொஞ்சம் மூச்சு விடுங்க! உங்களுக்கு இன்னமும் நாம வெளிநாட்டிலே வசிக்கிறதா நினைப்பா? இந்தியா திரும்பி வருஷம் ரெண்டாயிடுத்து! நம்மூர் பெண்கள் இன்னும் நீங்க சொல்கிற அளவுக்கு மாறலே, அதுவும் நம்ம பெண்கள் பரம சாதுங்க!"

 " இஸ் இட்? பார்ப்போம்! அதெப்படி கண்ணம்மா! புலிக்கு பிறந்தது, பூனையாச்சு?"

 "என்னை புலின்னு சொல்லி வாயடைக்கப் பார்க்காதீங்க!"

 "நானில்லே, உலகமே ஒப்புக்கொள்ளும். இன்று, நேற்று அல்ல, முப்பது வருஷம் முன்பே, மதம் விட்டு மாறி கல்யாணம் செய்துகொண்டவள், நீ! ஆமாம், அதுவும் வேதம் படித்து சாஸ்திர சம்பிரதாயத்திலே ஊறிப்போன குடும்பத்திலே பிறந்த நீ, கிறிஸ்துவனான என்னை, உங்க குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, கல்யாணம் செய்துகொண்டது புரட்சி இல்லையா? அது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.