(Reading time: 18 - 36 minutes)

 " சரி, சொல்லுங்க!"

 இப்படி கறாராகப் பேசுபவரிடம் எப்படி பேச்சை துவக்குவதென விழித்தார், சிங்காரம்!

 தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்.

 " வந்து.....நான் சென்னையிலிருந்து வருகிறேன். என் பெயர் சிக்கில் சிங்காரம். உங்களுக்கு குல தெய்வம எது?"

 " பழனி முருகன்தான்!"

 " அவர்தான், இந்த சிக்கில் சிங்காரத்தை அனுப்பியிருக்கிறார்னு முதல்லே நீங்க நம்பணும்."

 " என்னப்பன் முருகன் ஈரேழு உலகத்தையும் ஆள்பவன். அவன் அனுமதியில்லாம, எதுவும் நடக்காது, சொல்லுங்க, நேரமாகுது, கடையிலே நிறைய வேலை இருக்கு....."

 " உங்க மகள் வடிவழகி, இப்ப, உங்க மகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே மகளாயிட்டா......"

 " அப்படியா?"

 " என்ன அவ்வளவு சாதாரணமா கேட்கறீங்க? தமிழ்நாட்டுக்கே பெருமை தேடித் தந்த சாதனையாளர்! சென்னையிலே எல்லாரும் உங்க மகள் கோடீஸ்வரி போட்டியிலே கலந்துகொண்டு எல்லா கேள்விகளுக்கும் கரெக்டா பதில் சொல்லி இதுவரை யாரும் ஜெயிக்காத ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்றதை பார்த்து, அவங்களே ஜெயிச்சதுபோல சந்தோஷப்படறாங்க......"

 " நல்ல மனசு அவங்களுக்கு!"

 " அவங்களிலே ஒருத்தர், நகைக்கடை முதலாளி நடேசன் செட்டியார்! அவருக்கு ஒரே மகன். இருவருக்கும் உங்க மகள் வடிவழகியை, சென்னையிலே காலேஜிலே சேர்த்து, நிறைய படிக்கவைத்து, பெரிய அறிவாளியாக்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்க! அவங்க ஆசை அத்துடன் முடியலே, வடிவழகியை அவங்க மகனுக்கு கட்டிவைத்து மருமகளாக்கிக் கொள்ளவும் ஆசை! உங்களிடம் இதைப் பேசி, உங்க சம்மதம் தெரிஞ்சிகிட்டு வர, என்னை அனுப்பியிருக்காங்க....நீங்க

சம்மதம் சொன்னா, அவங்க ரெண்டு பேரும் உடனே இங்கே வந்து உங்களை குடும்பத்தோட சென்னை அழைத்துப்போக தயாராயிருக்காங்க...."

 " எல்லாம் என்னப்பன் முருகனின் விளையாட்டு! என்னை சோதிக்கிறான்.....

ஐயா! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், வடிவழகியை போட்டியிலே கலந்துகொள்ளச் சொன்னது, கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல வைத்தது, அவளுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வாங்கித் தந்தது, எல்லாமே என்னப்பன் முருகனின் விளையாட்டு. எங்களை பணத்தைக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.