(Reading time: 8 - 16 minutes)

 சோதனையாக, அவைகளிலும் 'காதலர் தின'த்துக்காக, போட்டோ, கதைகள், துணுக்குகள் எல்லாமே ரொமாண்டிக்!

 வார இதழ்களையும் வீசிவிட்டு, வெளியே கிளம்பினான்!

 கதவை பூட்டிவிட்டு, திரும்பினால், எதிரே பூமிநாதன்! கையில் பாட்டிலுடன்!

 பூமிநாதன், உமாநாத்தின் உற்ற நண்பன்!

ஆபீஸ் தோழன்! பல வருஷ பழக்கம்! இருவருக்கும் இடையே எந்த ஒளிவுமறைவும் கிடையாது.

 " என்னடா பூமி! இந்த நேரத்திலே?"

 கையிலிருந்த பாட்டிலை காட்டி, "வீட்டிலே, விருந்தாளிங்க! நைட் தங்கறாங்க! அதான், இங்கே வந்தேன், பாட்டிலோட!"

 " சரி, சரி, உள்ளே வா!" என்றவாறே, பூட்டை திறந்து இருவரும் வீட்டுக்குள் வந்தனர்.

 " ஏன்டா பூமி! சாப்பிட்டாச்சா?"

 " இதென்னடா, அசட்டுக் கேள்வி! (பாட்டிலைக் காட்டி) உமா!இதுக்கப்புறம்தானே, பூவா! கவலைப்படாதே! ரெண்டு பேருக்குமா சேர்ந்து, நானே ஆர்டர் பண்ணி வரவழைக்கிறேன், நீ வெளியிலே போகவேண்டாம்."

 " பூமி! எனக்கு மனசே சரியில்லைடா!....."

 " சரியாவதற்குத் தானேடா உமா! மருந்து கொண்டு வந்திருக்கிறேன்......."

 " இப்படியே எத்தனை நாளைக்குத்தான்டா, மருந்தையே சாப்பிடறது? டேய்! எனக்கு விடிவுகாலமே வராதா?"

 பூமி, உமாவை முதுகில் தடவிக் கொடுத்து, ஆறுதல் கூறினான்.

 " உண்மையான நண்பனா, இந்த நிமிடத்திலிருந்து உனக்கு ஒரு வழி பிறக்க முழு முயற்சி எடுக்கிறேன், கவலைப்படாதே!"

 உமாநாத் உள்ளே சென்று பிரிட்ஜை திறந்து, கிளாஸ் டம்ளர்களையும் சோடாவையும் எடுத்து வந்தான்.

 " உமா! நம்ம ஆபீஸிலே, முப்பது நாற்பது பெண்களிலே ஒண்ணுகூட தேறாதா?"

 " பூமி! அதிலே பிரச்னை என்னன்னா, என் வயசுக்குப் பொருத்தமானவங்க எல்லாரும் கல்யாணமானவங்க! மற்ற பெண்கள், ரொம்ப சின்னவங்க! என்ன செய்வது?"

 " உமா! சின்னவங்கன்னு அவங்களை அலட்சியப்படுத்தாதே! சில ஏழை குடும்பத்து பெண்கள், வேலை செய்து சம்பாதித்து, குடும்பத்தை காப்பாத்தறாங்க! அந்தமாதிரி உள்ளவங்க யாராவது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.