(Reading time: 8 - 16 minutes)

இருந்தா, உன்னெ வயசு வித்தியாசம் பார்க்காம கட்டிக்க சம்மதிப்பாங்கடா, ஏன்னா வரதட்சணை சீர் செனத்தி எதுவும் இருக்காதே!"

 " நான் எப்படிடா அதை தெரிஞ்சிக்கிறது?"

 " டோண்ட் வொரி! நண்பன் நான் எதுக்கு இருக்கேன், நாளைக்கே துப்பு துலக்க துவங்கறேன், இந்தா! இதை குடி!"

 உமா உள்ளே சென்று ஒரு பிளேட்டில், உருளைக்கிழங்கு சிப்ஸ் கொண்டுவந்து வைத்தான்.

 " பூமி! இது போதுமா? ஊறுகாய் வேணுமா?"

 " இது தீர்ந்தபிறகு, அது! இப்ப நீ உட்கார்! நாம நிறைய பேச வேண்டியிருக்கு!"

 " சொல்லு!"

 " உன் தனிமை நிச்சயமா ரொம்ப கொடுமைதான்! அது ஒழிய, நீண்டநாள் மருந்து, மறுமணம்.

 குறுகிய கால நிவாரணம் ஏதாவது இருக்கான்னு யோசனை செய்யலாமா?"

 " பூமி! என்னடா உளர்றே?"

 " பதறாதே, உமா! நான் தப்பா சொல்லலே! உனக்கு பேச்சுத்துணையா ஒரு ஆண் கிடைத்தால்கூட போதுமே! அந்த ஆணுக்கும் உனக்கும் பிடித்தமான ஒரு சங்கிலி எதுவாயிருக்கும்னு யோசனை பண்ணு!"

 " அதை சொல்றியா? உம்.....எனக்கு சமைக்கத் தெரியாது, இப்போ எனக்கு ஓட்டல் சாப்பாடு தான்! அது என் உடம்புக்கு ஒத்துவரவில்லை! அதனாலே, சமைத்துப் போடவும் வீட்டை சுத்தமா வைத்துக்கொள்ளவும் ஒரு நம்பத்தகுந்த ஆண் கிடைத்தால், அவனை வீட்டோடு தங்க வைத்துக் கொள்ளலாம். அப்படி ஒருத்தன் கிடைப்பானா?"

 " தேடறேன், வேற ஏதாவது நல்ல ஐடியா?"

 " யோசனை பண்றேன்"

 " சரி, டின்னருக்கு என்ன ஆர்டர் பண்ணலாம்?"

 " உனக்கு பிடிச்சதை நீ சாப்பிடு, எனக்கு வயிறு சரியில்லே, இட்லி வடை போதும்!"

 " ஓ.கே. எனக்கு மசால் தோசையும் உனக்கு இட்லி,வடையும் ஆர்டர் பண்றேன், நாற்பது நிமிஷத்திலே வந்துடுவான், அதற்குள்ளே இந்த டிரிங்ஸ் செஷனை முடிச்சிகிட்டா, வர்றதை சுடச்சுட சாப்பிடலாம்......"

 ஏதேதோ பேசிக்கொண்டிருந்ததிலே, நேரம் போனதே தெரியவில்லை!

 கதவு தட்டப்படும் ஓசை கேட்டு, கதவை திறந்தனர்.

 சுடச்சுட டின்னர்! அவனிடமிருந்து பார்சலை வாங்கிக்கொண்டு காசை கொடுத்தனர். வந்தவன் போகவில்லை, தயங்கி நின்றுகொண்டிருந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.