(Reading time: 8 - 15 minutes)

" சரி, பழசைப் பேசி, என்ன புண்ணியம்? இப்ப என்ன செய்யலாம், சொல்லு!"

 " இந்த மேட்ரிமோனியல் பீரோவிலே எழுதிவைத்தா, ஒரேநாளிலே வந்து குவியும் பெண்கள்!"

" சரி, அதை செய்வோம், தவிர, வேறென்ன செய்யலாம்? இப்ப நம்ம முழுநேர வேலை, குழந்தையோட கல்யாணத்தை சீக்கிரமா ஏற்பாடு செய்வதுதான்!"

 " நம்ம சொந்தக்காரங்களை விசாரிப்போமா?"

 " அவங்க எல்லாரும், நாம மொதல்லே இருந்தாமாதிரி, சாதி வெறியர்கள். குழந்தையோட சாதிப் பிரச்னையை கிளப்புவாங்க! அது வேண்டவே வேண்டாம், குழந்தை மனசு புண்படும்!"

" முதல்லே, நீங்க ரெண்டு பேரும் அண்ணனை, 'குழந்தே'ன்னு கூப்பிடறதை விடுங்க, 'குழந்தைக்கா கல்யாணம்?'னு கேலி செய்வாங்க"

" அடியே போடீ, துப்புக் கெட்டவளே! உனக்கு கல்யாணம் ஆகி, ஆறு வருஷம் ஆகுது, ஒரு குழந்தையை நீ பெத்துப் போட்டிருந்தேன்னா, அதை 'குழந்தே'ன்னு கொஞ்சுவோமில்லே....."

" அம்மா! நானே ஏற்கெனவே மனம் நொந்து போயிருக்கேன், நீவேற ஏம்மா, வெந்த புண்ணிலே வேலை செருகறே?"

 " ஏன்டீ! மாப்பிள்ளை உன்னிடம் பிரியமா இருக்காரா இல்லையா?"

" அவரை குற்றம் சொல்லாதேம்மா! நீ என்னை கேட்கறாப்போல, அவரை அவங்கம்மாவும் கேட்கறாங்க! ரெண்டுபேர் மீதும் தப்பில்லே, மேலே இருக்கிறவன் தூங்கி வழியறான்....."

" பிள்ளைவரம் வேண்டி, கோவில் குளம் போய்ட்டு வாங்கடி! சமயபுரம் ஆத்தாளுக்கு முடிஞ்சுவைடீ! திருப்பதி மலையிலே நடந்துவரோம்னு வேண்டிக்க! ஆனா, மாப்பிள்ளைக்கு எப்பவும் வேலை, வேலைதான்! வீட்டுக்கு வரவே லேட்டாவுது!"

 " எங்க பிரச்னையை விடும்மா! அப்பா! இன்னிக்கி, அண்ணன் வீடு வந்தவுடனே, நாம மூணுபேரும் சுற்றியமர்ந்து, பேசுவோம்!"

" ஆமாம்! இன்னிக்கி பேசுவோம்....."

 சீமான் அன்று வீடு திரும்பும்போது, இரவு மணி பத்து!

களைத்துப்போய் வந்திருந்தான். முதலில், அவனுக்கு வயிறார சாப்பாடு போட்டனர்.

 அவனும் சிரித்தபடி, அம்மா-அப்பா இடையே அமர்ந்து, "என்ன ஏதோ பலமா யோசிக்கிறீங்க?"

" கண்ணா! எல்லாம் உன் கல்யாணத்தைப் பற்றித் தான்டா!"

 சீமான் வாய்விட்டு சிரித்தான்.

     " ஏன்டா சிரிக்கிறே?"

     " அம்மா! இப்பல்லாம், ஆணோ, பெண்ணோ, கல்யாணத்தைப்பற்றி, நினைக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.