(Reading time: 8 - 15 minutes)

துவங்கிறபோதே வயசு முப்பதாயிடுது, அப்படி இப்படினு மூணு, நாலு வருஷம் போயிடுது, கல்யாணம் நடக்கிறபோது முப்பத்தைந்து வயசு ஆயிடுது!

இப்ப எனக்கு இருபத்தெட்டு வயசுதான் ஆவுது! இன்னும் ரெண்டு வருஷம் ஆகட்டும், தேடுதலை துவங்குவோம்....சந்தோஷமா இருங்க, ரெண்டு பேரும்!  இப்ப உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்போறேன்......."

        " என்ன, என்ன, சொல்லுடா "

" சீக்கிரத்திலே, நம்ம பிசினசை விற்றுவிட்டு நானும் உங்களோடு சேர்ந்து கோவில், குளம் வரப்போறேன், அது நம்பர் ஒன்! ரெண்டாவது, உங்க பெயரிலே, தினமும், நாடு முழுதும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் நடத்த ஏற்பாடு செய்யப்போறேன்!

மூணாவது, ஏழைங்களுக்கு வேலை கிடைக்க, அவங்களுக்கு தொழில் பயிற்சி தர நிறுவனம் நடத்தப்போறேன்.

நாலாவது, இப்ப இங்கே இருக்கிற முதியோர் காப்பகம் போல, மாவட்டம் தோறும் ஒண்ணு நடத்தப் போறேன். எல்லாமே உங்க பேரிலே!

ஊரே உங்க ரெண்டு பேரையும் வாழ்த்தறதை என் காதார கேட்டு சந்தோஷப்படப் போறேன்."

இருவரும் 'குழந்தே' என்றழைத்து, அணைத்து முத்தமிட்டனர்.

     " கண்ணா! நீ சொல்வது ரொம்ப கரெக்ட்! நிறைய பணம் சம்பாதித்தாகிவிட்டது. போதும். இனி, பேரும் புகழும் தான் ஆசைப்படணும். அதுக்கு நீ ஏற்பாடு செய்யப் போறே! எங்களுக்கு குறையே இல்லைடா!"

        " குழந்தே! யோசித்துப் பார்த்தால், அதிசயமாயிருக்குடா! நீ யாரோ, நாங்க யாரோ! ஆறு வருஷம் முன்பு! திடீர்னு ஒருநாள், உன் தங்கச்சி ஏதோ சொல்ல, நீ எங்க வளர்ப்புமகனாயிட்டே!

மனித முயற்சியிலே நடக்கிற காரியமா இது? தெய்வம் நினைத்ததுனாலே, நடந்தது.

பத்துமாதம் சுமந்து பெற்ற மகனைவிட, நீ எங்களிடம் பாசமா இருக்கே, எங்களுக்காகவே வாழறே!

இப்பல்லாம், பெத்த பிள்ளைங்களே, ஆணோ, பெண்ணோ, தாங்களே ஜோடி சேர்த்துகிட்டு, பெற்றவங்களை கல்யாணத்துக்கு கூப்பிடுது!

ஆனா, நீ, தெளிவா, உறுதியா, உன் கல்யாணத்தை முடிவு செய்கிற உரிமையை எங்களிடம் கொடுத்துட்டே!

ஆனா, நாங்கதான் சரியா முடிவு பண்ணத் தெரியாம சொதப்பி, காலத்தை வீணாக்கிட்டோம்.

அதனாலே, இப்ப நாங்க முடிவெடுத்துட்டோம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.