(Reading time: 10 - 20 minutes)

மாமா இரத்தத்தைத் துடைத்து என் காயத்துக்கு மருந்து போட்டுக் கட்டினார். தனது காரில்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு பத்துத் தையல்களும் ஒரு டெட்டனஸ் ஊசியும் போட்டபோதும், நாயுடன் எனக்குக் கோபமில்லை. அந்த வாயில்லா ஜீவனுக்கு நேரத்துக்குச் சாப்பாடும் தண்ணியும் வைக்காத அதன் சொந்தக்காரர் மீதுதான் என் கோபமெல்லாம், எனக்கு அதை மாமாவிடம் சொல்லத் தைரியம் இல்லை!. அம்மா விடவில்லை அவரைத் திட்டு திட்டென்று திட்டி விட்டாள்.  அன்று மாலை நான் பள்ளிக்கூடம் போகவில்லை.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’. அது ஏன் மனிதனின் சிறந்த நண்பனாம், அந்த நாலுகால் பிராணிக்கும் பொருந்தாது?’

சில வாரங்கள் சென்றன. நான் மறுபடியும் பெல்லாவைப் பார்க்க மாமா வீட்டுக்குப் போகத் தொடங்கினேன். அது வாலை ஆட்டி, துள்ளிக்குதித்து என்னை வரவேற்றது.

நான் அதனருகில் போனதும் என்மேல் ஏறி "என்னை மன்னித்துவிடு" என்று சொல்வது போல தான் கடித்த இடத்தில் மெதுவாக நக்கத் தொடங்கியது. நானும் பதிலுக்கு அதைத் தடவி "நீதான் எனது நல்ல நண்பன்" என்று கூறினேன். நான் சொல்வதை ஆமோதிப்பதுபோல அதுவும் தனது வாலை ஆட்டியது.   

மாமா இப்போது அதைக் கட்டி வைப்பதில்லை. சாப்பாடும் தண்ணீரும் அதன் தட்டில் எப்போதும் நிறைய இருக்கும். 

தனக்குச் சாப்பாடு போடுபவர்களைத்தான் வேட்டை நாயும் தொடரும்’ என்பதை நிரூபித்து விட்டது பெல்லா. ஆனால் மனிதர்கள் சாப்பாடு போடுபவர்களையே வேட்டை ஆடி விடுகிறார்கள்!’

ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன பெல்லாவுடன் என் நட்புத் தொடர்ந்தது. நானும் பெல்லாவும் ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் நடப்போம். பந்து எறிந்து விளையாடுவோம். அது என் காலையே சுற்றிச் சுற்றி வரும்.

நான் அதைக் கேலி செய்து, எவ்விதமான முட்டாள் வார்த்தைகளையும்  வீசலாம்அதைத் திட்டலாம், அது தலையை உயர்த்தி, என்னை உற்றுப் பார்த்து, நான் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டு"ஆம் நீ சொல்வது சரி! ஏன் எனக்கு மட்டும் அப்படிக் கெட்ட வார்த்தைகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை ? " என்று கேட்பது துபோல் எனக்குத் தோன்றும்.

எமது நட்புக்கு இடையே இன்னுமொரு நட்பு!

மாமா மகள் மாலாவுக்கும் எனக்கும் இடையே என்னை அறியாமலே ஏற்படுவதை நான்

4 comments

  • :hatsoff: to bella !!Different one and well expressed ma'am :clap: :clap: Heart touching (y) <br />Thanks for the happy ending!!
  • ஆழமான மனோரீதியான அற்புதக் கதை! இதை படிக்கக்கூட, வின்னிக்கு நேரமிருக்காது, தன் பிரிய நண்பன் வின்ஸ்டனுடன் வாக்கிங் போய்க்கொண்டிருப்பாள்! வாழ்த்துக்கள்! இந்தமாதிரி கதைகள் நிறைய வரவேண்டும்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.