(Reading time: 10 - 20 minutes)

மாலா?அவளைக் கண்டதும் கட்டிப் பிடித்து அணைக்க வேணும் போல இருந்தது. ஆனால், அது பலர் நடந்து போகும் தெரு.

அவளுடன் இருந்த என் கோபம் இன்னும் தணியவில்லை.

என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு "எப்படி இருக்கிறாய் மாலா?" என்று கேட்டேன். அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது. அவள் அதை மறைத்துக் கொண்டு "நான் நல்லா இருக்கிறேன்.நீ எப்படி இருக்கிறாய்? " என்றாள்.

 “எவ்வளவு காலம் கண்டு. வா வீட்டுக்குப் போகலாம்" என்று அவளை அழைத்தேன்.

அம்மா, மாமா, பெல்லா எல்லோரும் இறந்தது முதல். எமக்கு பேசுவதற்கு இன்னும் பல விஷயங்கள் இருந்தன. நான் முக்கியமாக அறிய விரும்பியவை, ஏன் மாலா என்னிடம் சொல்லாமல் ஊரைவிட்டுச்  சென்றாள்? அவளது கணவன் யார்?

நாய்கள் பகுத்தறிந்து நியாயம்காட்டி வாதாடுவதில்லை. தாம் விரும்பும் ஒருவருக்கு எதிராக எதையும் மனதில் வைத்திருப்பதில்லை. அவை ஒரு மனிதனின் வெளித்த தோற்றத்தைப் பார்ப்பதில்லை, அவனது அகத் தோற்றத்தைத்தான் பார்க்கின்றன’.

பத்துமண் மாமாவுக்கு கடன்மேல் கடன். வீட்டின் மேலிருந்த கடன் அடைக்க முடியாமல் வீடு வங்கியிடம் பறிபோய்விட்டது. மாலாவையும் பெல்லாவையும் அழைத்துக்கொண்டு அவர் ஊரைவிட்டு வெகுதூரம்சென்றுவிட்டார்.

மாலாவுக்கு பாலாவையோ அல்லது அவனது தாயையோ சந்திக்கமுடியவில்லை. கடன்காரன் ஒருவனின் வற்புறுத்தலால், அவன் குடிகாரன் என்றறியாமல், மாலாவை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தார் பத்துமன் மாமா. எல்லாம் மிக விரைவாக நடந்து முடிந்தன. மாலாவும் வேறு வழியின்றி அப்பாவின் விருப்பத்துக்குச் சம்மதித்தாள்.

மாலாவை அவள் கணவன் ஒரு மனைவிபோல் நடத்தவில்லை. சமைப்பதற்கும் வீட்டு வேலைகள் செய்வதற்கும் குடித்துவிட்டு அவனிடம் அடிவாங்கவும், அவளை ஒரு அடிமைபோல் நடத்தினான்.

வரதட்சணை இன்றி மாலாவை முடித்ததால், அவள் கணவனிடம் பட்ட கொடுமைகளை அறியாமலேயே பத்துமன் மாமாவின் உயிரும் பிரிந்தது.

மாலாவுக்கும் கணவனுக்கும் இடையே ஏற்றப்பட்ட வாக்குவாதம் முத்த, அவன் அவளை அடிக்க, பெல்லா பாய்ந்து அவன் கழுத்தில் கடிக்க, பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து, சிகிச்சை பயனின்றி, அவனும் இறந்துவிட்டான்.

அவன் இறந்தது அவனது குடிப்பபழக்கத்தால், பெல்லா கடித்ததால் அல்ல என்று டாக்டரின் அறிக்கை கூறியது. அவனுக்கு ஈரலில் சிரோசிஸ். அதிகம் குடிப்பவர்களுக்கு ஈரலில் ஏற்படும் நோய்!

4 comments

  • :hatsoff: to bella !!Different one and well expressed ma'am :clap: :clap: Heart touching (y) <br />Thanks for the happy ending!!
  • ஆழமான மனோரீதியான அற்புதக் கதை! இதை படிக்கக்கூட, வின்னிக்கு நேரமிருக்காது, தன் பிரிய நண்பன் வின்ஸ்டனுடன் வாக்கிங் போய்க்கொண்டிருப்பாள்! வாழ்த்துக்கள்! இந்தமாதிரி கதைகள் நிறைய வரவேண்டும்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.