(Reading time: 10 - 20 minutes)

உணருகிறேன். இருவருடன் தொடங்கிய எமது தினசரி நடை இப்போது மூவருடன் தொடர்கிறது. எனது ஒரு கையில் மாலாவின் கை. மறு கையில் பெல்லாவின் கழுத்தில் தொங்கும் கயிறு.

எப்போதும் பெல்லாதான் எங்களின் தலைவி என்று எண்ணியபடி எங்களுக்கு முன்னே வேகமாக ந டக்கும். நான் கயிற்றைப் பிடித்தபடி அதன் பின் ஓடுவேன். மாலா எம்முடன் போட்டி போடா இயலாமல் தனிமையில் நடப்பாள்.

அவர்களுக்கு இடையே ஒரு நட்பு இருக்கிறதா? எனக்கு ஒரு சந்தேகம்! நான் மாலாவிடம் அதிகம் பழகினால் பெல்லாவுக்குப் பிடிப்பதில்லை. மாலாவை தனியே அழைத்துச் சென்றால் அவளுக்குச் சந்தோசம், ஆனால் பெல்லாவுக்குப் பிடிப்பதில்லை. நான் முன்போல் அதைக் கவனிப்பதில்லை என்று பெல்லா நினைக்கிறதோ? அவர்களுக்கு இடையே ஒரு பொறாமை தெரிகிறது!

இந்த உலகத்திலேயே நாய் ஒன்றுதான் உன்னை உண்மையாகக் நேசிக்கும் அது தன்னை நேசிப்பதைவிட’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அது தனக்கும் ஒரு காதலன் இல்லையே என்று பொறாமைப்படும் என்று நான் கேள்விப்பட்டதில்லை.

நாய்கள் எமது வாழ்க்கையின் முழுமை அல்ல. ஆனால் அவை எமது வாழ்க்கையை முழுமையாக்கிவிடுகின்றன!’

மாலா எனக்காக பெல்லாவுடன் நட்புள்ளது போல் நடந்து கொள்வாள். ஆனால் பெல்லா வஞ்சகமில்லாமல் தனது பொறாமையை சிலவேளைகளில் அவளைப்  பார்த்துக் குலைத்து காட்டிவிடும்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் நிபந்தனையற்ற அன்புடன் நேசிக்கத் தொடங்கினால், இந்த உலகமே வாழ்வதற்கு ஒரு சந்தோசமான இடமாக மாறிவிடும்.’

மாலா இப்போது பெல்லாவுடன் வெளியே செல்லத் தயங்குகிறாள், என்னையும் தள்ளி வைக்கத் தொடங்குகிறாள். உண்மையிலேயே அவள் என்னை விரும்புகிறாளா? அல்லது பெல்லாதான் காரணமா?, அல்லது எனது கற்பனையா?. எனக்குப் புரியவில்லை!

ஒரு நாயுடன் நான் வைத்திருக்கும் அன்புக்காக, அவளிடம் நான் வைத்திருக்கும் காதலை அவள் அலச்சியம் செய்கிறாளோ?

நான் அவளைப் புறக்கணிக்கிறேனா? ஏன் அவள் தன மனதில் இருப்பதை எனக்குச் சொல்வதில்லை?

நான் இப்போது மாமா வீட்டுக்குப் போவதில்லை! மாலாவையும் பெல்லாவையும் என்னால் பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.

ஆனால் நான் ஏன் அவளுக்குப் பின்னால் போகவேணும்? அவளுக்கு என்மேல் உண்மையான

4 comments

  • :hatsoff: to bella !!Different one and well expressed ma'am :clap: :clap: Heart touching (y) <br />Thanks for the happy ending!!
  • ஆழமான மனோரீதியான அற்புதக் கதை! இதை படிக்கக்கூட, வின்னிக்கு நேரமிருக்காது, தன் பிரிய நண்பன் வின்ஸ்டனுடன் வாக்கிங் போய்க்கொண்டிருப்பாள்! வாழ்த்துக்கள்! இந்தமாதிரி கதைகள் நிறைய வரவேண்டும்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.