(Reading time: 10 - 20 minutes)

காதலிருந்தால் ஏன் அவள் என்னை வந்து பார்க்கட்டுமே?

பெல்லாவிடமிருந்து  அவன் கற்றவை பல. பாடசாலையில்  கூட அவன் கற்றதில்லை !      

ஒரு நாய் ஒருவனுக்கு நம்பிக்கையையும், விடாமுயட்சியையும், ஓய்ந்து இருப்பதற்கு முன் மூன்று முறை சுற்றுவதையும் கற்றுத் தருகிறது.’ 

நாய்கள் புத்திசாலிகள். அவை தமது புண்கள் ஆறும் வரை ஒரு அமைதியான மூலையில் பதுங்கியிருந்துவிட்டு, தமது புண்கள் ஆறி தாம் முழுமையாகியதும் வெளியே வருகின்றன.’

நான் ஏன் மாமா வீட்டுக்குப் போவதில்லை என்று அம்மாவுக்கு ஆச்சரியம்.

மாமாவும் மாலாவும் அந்த ஊரை விட்டுப் போய் பல வருடங்கள் கழிந்துவிட்டன

நானும் பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு இப்போது ஆசிரியராகப் பணிபுரிகிறேன். எனது படிப்பிலும் பரீட்ச்சைகளிலும் காலம் போனதே தெரியவில்லை. அம்மாவும் இறந்துவிட்டாள்

தந்தை இல்லாத நானும் தனி மனிதனாகி விட்டேன்.

ஆனால்  மாலாவையும் அந்த பெல்லாவையும் என்னால் மறக்க முடியவில்லை. ஏன் என்னிடம் சொல்லாமல் அவள் மறைந்தாள்?

எனக்கு அவர்கள் மேல் கோபம். நான் பத்துமன் மாமாவை மாமா என்று அழைத்தாலும் அவர் எனக்கு உறவில்லை. அவர் என் அப்பாவின் நண்பர். அப்பா இறந்ததும் அவர் அம்மாவுக்கு பல உதவிகள் செய்தவர். தாயில்லாத மாலாவை  அம்மா தனது மகள் போலப் பார்த்தாள்.

அம்மாவுக்குக்கூடச் சொல்லாமல் மாமாவும் மாலாவும் அவ்வூரை விட்டுப் போனது எனக்குக் கோபம்……

நாய்கள் தமது நண்பர்களை விரும்பும் எதிரிகளைக் கடித்து விடும்.  ஆனால் மனிதர்கள் அப்படி அல்ல. அவர்கள் தூய நட்பைக் காட்ட அருகதை அற்றவர்கள். அவர்கள் எப்போதும் நட்பையும் வெறுப்பையும் கலந்து விடுவார்கள்’. பெல்லாவுக்குச் சுதந்திரம் இருந்திருந்தால் அது என்னைத் தேடி ஓடி வந்திருக்கும்!

ஒரு சாதாரண நாய் ஒரு சாதாரண மனிதனைவிட நல்ல குணமுள்ளது.     

பாடசாலை முடிந்து என் மோட்டார் சைக்கிளில் வீட்டை நோக்கிப் போகிறேன். தூரத்தில் ஒரு பெண்  கையில் ஒரு பையுடன் என் முன்னால் நடந்து போவது தெரிகிறது. அவள் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேகமாக நடக்கிறாள். நான் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி அவளருகே போகிறேன்.

என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. அது வேறு யாருமல்ல என் மாலாதான்!

அவள் மெலிந்து, வயது போனவள் போல் தோன்றினாள். அவளா என் அழகான

4 comments

  • :hatsoff: to bella !!Different one and well expressed ma'am :clap: :clap: Heart touching (y) <br />Thanks for the happy ending!!
  • ஆழமான மனோரீதியான அற்புதக் கதை! இதை படிக்கக்கூட, வின்னிக்கு நேரமிருக்காது, தன் பிரிய நண்பன் வின்ஸ்டனுடன் வாக்கிங் போய்க்கொண்டிருப்பாள்! வாழ்த்துக்கள்! இந்தமாதிரி கதைகள் நிறைய வரவேண்டும்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.