(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

பொருள் இருக்கும்”

  

”ஏன்டா அவர்லாம் என் வீட்டுக்கு வரமாட்டாரா”

  

”உன் வீட்டுக்கு அவர் ஏன் வரனும்”

  

”உன் விட்டுக்கே வராரே அதனால கேட்டேன்“

  

”அவருக்கு பிடிச்ச மாதிரி நான் வீட்டை அலங்காரம் செய்து வைச்சிருக்கேன், சாக்லேட் வாங்கி வைச்சிருக்கேன், இதப்பாரு கிறிஸ்துமஸ் மரம், இதுன்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும் குழந்தைகளுக்கும் இது பிடிக்கும், அதுவுமில்லாம இராத்திரி நேர்த்தில என் வீட்டை வந்து பாரு நான் சீரியல் பல்புகளை தொங்க விட்டிருக்கேன். என் வீட்டு வாசலுக்கு மேல ஸ்டார் தொங்கவிட்டிருப்பேன் அது பார்க்க ரொம்ப அழகா இருக்கும் என சொல்ல கதிரேசன் பலமாக யோசித்தார். அதற்குள் ராபர்ட்டோ பலகாரத்தை சாப்பிட்டு காலி செய்து காலி பாத்திரத்தை கதிரேசனிடம் நீட்ட அதை வாங்கியவர்

  

”ஆமா என்னிக்கு கிறிஸ்துமஸ் விழா”

  

”ஏன் கேட்கற”

  

”சொல்லு”

  

”நாளை மறுநாள் வருது உன் புள்ளையும் குடும்பத்தோட அன்னிக்குதான் வரான், வந்தவங்களை விரட்டிடாதய்யா பண்டிகை நாள் அதுவுமா நல்லது செய்யனும் புரியுதா”

  

”எல்லாம் எனக்குத் தெரியும் நீ ஒண்ணும் எனக்கு புத்திமதி சொல்லாத, நான் பார்த்து வளர்ந்தவன் நீ, என் முன்னாடி நின்னு பேசற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா படவா” என கோபித்துக் கொண்டு வெளியே செல்ல ராபர்ட்டோ தலையை சொறிந்தான்

  

கதிரேசனும் ஏதேதோ யோசனைகளுடன் வீட்டிற்கு வந்தார். வந்தவர் அங்கிருந்த  கயிற்றுகட்டிலில் அமர்ந்துக் கொள்ள அவரின் வரவை அறிந்த கமலாவும் தண்ணீர் செம்புடன்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.