(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

ஸ்தம்பித்துப் போனான்.

  

”பெரிசு என்ன சேட்டையெல்லாம் செய்திருக்கு பாரேன், ஆமா எங்க அந்தாளு“ என அக்கம் பக்கம் சுற்றி பார்க்க அந்நேரம் பேரனோ

  

”ஐஐ சான்டா க்ளாஸ்” என உற்சாகமாக கத்த அனைவருமே ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ராபர்ட்டுக்கு அதிர்ச்சிதான், சான்டா க்ளாஸ் உருவத்தில் வந்ததே கதிரேசன்தான்

  

”எப்பா பெரிசு என்னய்யா இப்படி வந்து நிக்கற ஆஹா அப்படியே சான்டாவை போல இருக்காப்ல” என தனக்குத்தானே பேசிக் கொண்டான் அங்கு நடப்பது அனைத்தும் ஆச்சர்யமாகவே இருந்தது

  

பேரக்குழந்தையோ அங்கு சான்டாவாக வந்த கதிரேசனிடம் சென்று

  

”சான்டா சான்டா” என குதிக்க அவரோ பேரனை அள்ளி தூக்கிக் கொண்டார் அந்த நொடி அவரின் வீம்பு, வைராக்கியம், கௌரவம் அனைத்தும் ஓடிவிட்டது.

  

தந்தைதான் சான்டாவாக வந்ததை அறிந்துக் கொண்ட அவரின் மகனும் அதைப்பற்றி தனது மனைவியிடம் சொல்ல அவரும் மகிழ்ந்தார்.

  

ராபர்ட்டோ கதிரேசனை தேடி வந்தான். அதற்குள் கதிரேசன் தன் பேரனுக்காக பொம்மையை பரிசு பொருளாக தர அதை ஆசையாக வாங்கியவன், சான்டாவின் கன்னத்தில் முத்தம் வைத்தான். அதில் கதிரேசன் கர்வம் கொண்டார்.

  

”சான்டா” என அழைத்தபடி வந்தான் ராபர்ட், அவனைக்கண்டதும் கதிரேசனோ

  

”வாடா ராபர்ட்டு உனக்கும் பரிசு பொருள் இருக்கு” என சொல்லி கமலாவை பார்க்க கமலாவும் ஒரு பரிசு பொருளை கொண்டு வந்து தர அதை வாங்கி ராபர்ட்டிடம் தந்தார்

  

கதிரேசனிடம் அவரின் மகனும் மருமகளும் ஒன்றாக வந்து கைகூப்பி மன்னிப்பு கேட்க அவர்களை அன்புடன் ஏற்றுக் கொண்டார் கதிரேசன், கமலாவோ வந்திருந்த மருமகளிடம்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.