(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

”உன் பேரு என்னம்மா”

  

”ரோஸ்“

  

”ரோஸாவா நல்ல பேர்தான் ரோஸாப்பூ போல அழகாதான் இருக்க, இந்த வீட்டுக்கே உன்னால களை வந்துடுச்சி, இனி உன்னை நான் எங்கயும் போக விடமாட்டேன் இது உன் வீடு நீ இங்கதான் இருக்கனும்” என சொல்ல அவள் முகம் மலர்ந்தாள்.

  

கதிரேசன் வீட்டிற்கு அவனின் மகன் குடும்பம் வந்ததும் கூடவே அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதும் கேள்விபட்டு அந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் வந்து பார்த்தார்கள், வந்தவர்களுக்கு முதலில் அந்த உயரமான அலங்காரம் செய்யப்பட்டு ஒளி வீசிய மரம்தான் தெரிந்தது. அதன்பின் சான்டாவாக இருந்த கதிரேசனைக்கண்டு அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அவரோ அவர்களின் சிரிப்பைக்கண்டு கோபம் கொள்ளாமல் தனது பேரன் கையாலேயே வந்திருந்தவர்களுக்கு இனிப்புகளையும் பரிசு பொருட்களையும் தந்து அவர்களுக்கு ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்தும் சொல்லி முடித்தார்.

  

அதோடு கமலாவும் தன் கணவரிடம்

  

”ஏங்க பாட்டு பாடனுமே பாடவாங்க”

  

”பாட்டா அட ஆமாம்ல மறந்துட்டேன் சரி சரி பாடு பாடு கேட்போம்” என சொல்ல அவரும் தமிழில் கிறிஸ்துமஸ் பாடலை பாட அதை வெகுவாக ரசித்தனர் அனைவரும்.

  

காலையில் எழுந்து ஆலயம் செல்வோம்

  

கர்த்தரை தொழுது நன்றியை சொல்வோம்

  

பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.