(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

”எதுக்கு”

  

”நாமளும் பண்டிகை கொண்டாடறோம்னு அவருக்கு தெரியாதுல்ல, அவர் பாட்டுக்கு வராம போயிட்டா பாவம் என் பேரன் வருத்தப்படுவான்ங்க“

  

”சரியா சொன்ன நான் நாளைக்கு போய் நட்சத்திரத்தை வாங்கிட்டு அப்படியே சான்டாவை வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பு சொல்லிட்டு வந்துடறேன்” என சொல்ல அவரும் சரியென்றார்

  

மறுநாள் பொழுது விடிந்தது.

  

கிறிஸ்துமஸ் நாள் வந்தது.

  

காலையிலேயே கதிரேசனும் கமலாவும் விரைவாக எழுந்து குளித்து முடித்து தயாரானார்கள்.

  

”ஏங்க கடைக்குப் போகலையா”

  

”இதோ கிளம்பிட்டேன்” என கதிரேசனும் அவசரமாக கடைக்குச் சென்றார்.

  

அங்கு ராபர்ட்டும் ஏதோ ஒரு பொருளை வாங்கிக் கொண்டிருந்தான், கதிரேசனோ நேராக ஒரு நட்சத்திரத்தை வாங்கிக் கொண்டு திரும்புகையில் ராபர்ட்டும் எதிரில் வந்தான்

  

”பெரிசு இங்க என்ன செய்ற”

  

”நட்சத்திரம் வாங்க வந்தேன்”

  

“இது எதுக்கு உனக்கு”

  

”வைச்சி விளையாட“

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.