(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

”ஆமாம் போய்யா பெரிய வீராப்பு இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை, அங்கங்க எப்படியெல்லாமோ வாழறாங்க, நீ என்னடான்னா இப்படியிருக்க இதப்பாருய்யா சும்மா வீம்பு பிடிச்சிக்கிட்டு ஆடாத, உன் எதிரிகள் எல்லாம் எப்ப நீ மண்டையை போடுவ, எப்ப உன் நிலத்தை எடுத்துக்கலாம்னு கழுகு கண்ணா சுத்தறாங்க, நீ போன பின்னாடி உன் சம்சாரத்தை யார் பார்த்துக்குவா, அதை விடு உன் பேரனுக்கு சொத்து எதுவும் தரமாட்டியோ”

  

”எது சொத்தா? நான் என் புள்ளையே வேணாம்ங்கறேன் அவன் புள்ளைக்கு நான் சொத்து தரனுமா”

  

”தராட்டி போ ஆனா உன்னை விட உன் புள்ளை நல்லவன்யா, பெத்த புள்ளைக்கு உன் பேரை வைச்சான் பாரு அவன்தான்யா மனுஷன் நீயும் இருக்கியே” என திட்ட கதிரேசனுக்கு ஆச்சர்யமாகிப் போனது

  

”எலேய் என்னல்ல சொல்ற“

  

”ஆமாம்யா உன் பேரைதான் உன் பேரனுக்கு வைச்சிருக்காங்க, பேர் வைச்சதுக்காகவே பெயர் சொல்லி கூப்பிடறதில்லையாம், மரியாதையா நடத்தறாங்களாம், உன் பேரன் பேசறானாம் பேச்சுகூட அப்படி இப்படி வருதாம், அப்படியே உன்னை போலவே இருக்கானாம்” என சொல்ல கதிரேசனுக்கு உள்ளுக்குள் ஒரு கர்வம் வந்தது

  

”ஆனாலும் அவன் செஞ்சது தப்புதானே, ஏன் நான் பார்த்து அவனுக்கு கல்யாணம் கட்டிவைக்க மாட்டேனா என்ன”

  

”யாரு நீயா உனக்கு பிடிச்ச பொண்ணை பார்ப்ப, அது எப்படி உன் புள்ளைக்கு பிடிக்கும் சொல்லு, பேரனே வந்தாச்சி, பேசவும் ஆரம்பிச்சிட்டாப்லயாம், நீ பாட்டுக்கு இப்படியே வீம்பா இருந்தேன்னு வையேன், உன் பேரனே உன்னை தேடி வந்து உன் சட்டையை பிடிச்சி ஏன்டா என்னை பார்க்க வரலைன்னு கேட்டான்னு வையேன் அப்ப உன் மானம் போகாதா யோசி”

  

”அவன் என் சட்டையை பிடிச்சிடுவானா”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.