”இதான் கிறிஸ்துமஸ் மரம்”
”இது எதுக்கு”
”இதப்பாரு கிறிஸ்துமஸ்னா மரம் இருக்கனும், இப்படி அழகுப்படுத்தி வைக்கனும், அப்பதான் கிறிஸ்துவுக்கு பிடிக்கும், நீ கருப்புசாமிக்கு படையல் போடறல்ல அது போல இது”
”அப்படியா ஆமா நடுவீட்ல எப்படிடா மரம் வளருது“
”அறிவாளி நீ, அது மரம் மாதிரியிருக்கற ப்ளாஸ்டிக்”
”ஓஹோ ஆமா அது என்னடா என்னென்னவோ தொங்க விட்டிருக்க”
”அதுவா பெல்லு, பரிசு பொருளு சும்மா அழகுக்கு”
”அழகா இருக்கே இதையெல்லாம் நீயா செய்த, நம்ப முடியலையே”
”நம்பாத இதை நான் செய்யலை, இதை இப்படியே கடையில வித்தாங்க நான் விலைக்கு வாங்கி வந்தேன்”
”அப்படியா ஆமா இது எம்புட்டு விலை இருக்கும்” என கேட்க அவனும் சொன்னான் அதைக்கேட்டு வாயடைத்துப் போனார் கதிரேசன்
”அம்புட்டு விலையா”
”ஆமாம் வருஷத்துக்கு ஒரு முறைதானே இப்படி விழா கொண்டாடுவோம், அதுக்காக வருஷம் முழுக்க பணம் சேர்த்து வைப்போம்”
”அப்படியா”