(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”அவள்தான் வந்துட்டாம்மா” என அலறினான் சரவணன்

  

”இருடா இரு இரு வா வா பார்க்கலாம்” என சொல்லி அழைத்தபடியே வெளியே செல்ல சரவணனும் தாய் இருக்கும் தைரியத்தில் கெத்தாக வெளியேறி வந்தான்.

  

மலரும் சரவணனை கண்டு சிரித்தபடியே

  

”ஓ ரெடியாயிட்டியா சரி சரி வா வா நேரமாகுது ஆஸ்பிட்டலுக்குப் போகலாம்” என சொல்ல அவனோ முடியாது என்பது போல் தலையாட்டிவிட்டு அவனின் தாயிடம் தஞ்சமடைய வைதேகியோ மலரிடம்

  

”ஏம்மா மலரு அவனை ஏன் கஷ்டப்படுத்தற விடும்மா, நான் வேற இன்னிக்கு சீக்கிரமா ஸ்கூல்க்குப் போகனும், முதல் நாளாச்சே அவன் என்னை ட்ராப் பண்ணப்போறேன் நீ கிளம்பு இந்த ஊசி போடறதெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என சொல்ல அவளோ விடவில்லை

  

”ஆன்ட்டி உங்களுக்கு வேலைக்கு போக அவசரம்னா நீங்க ஆட்டோல போங்க ஆனா, உங்க பையனோட ஹெல்த் விசயத்தில நீங்களே இப்படி கவனக்குறைவா இருக்கலாமா சொல்லுங்க”

  

”அதுக்கில்லை மலரு அவன் பயப்படறான்ல”

  

”ஆன்ட்டி என்னை நம்புங்க நானே கிட்ட இருந்து ஊசி போடறேன், ஒண்ணும் வலிக்காது என்னை நம்பி அவனை அனுப்புங்க“ என சொல்ல வைதேகிக்கு நம்பிக்கை வந்தது அவர் சரவணனை பார்த்து

  

”மலரு சொல்றதை கேட்டல்ல அவளே ஊசி போடறாளாம் உனக்கு வலிக்காது நீ அவள்கூட போப்பா”

  

”அம்மா” என ஈனமாக அழைத்தான் சரவணன்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.