விவேக். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியும் பாரதி வருவதாக தோன்றாததால், பாரதியை தேடி உள்ளே சென்றான். அங்கே அவன் மனைவி மும்முரமாக கணினி முன் அமர்ந்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்று அருகில் சென்று பார்த்தால், ஏதோ அஜித்-சிம்ரன் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அவனையும் மீறி சற்றே ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் எதையும் காட்டாது, மனைவியை அழைத்தான்.
“பாரதி...”
அவனை அங்கே எதிர்பார்க்காதது போல், அவன் குரலில் அவள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.
“சாரி... ஏதோ ரொம்ப முக்கியமான வேலை போல... நான் வந்ததை கூட கவனிக்கலை...”
அவனின் நக்கல் பேச்சை புரிந்துக் கொண்டதற்கு அறிகுறியாக அவள் முகத்தில் சற்றே புன்னகை தோன்றிய போதும், அவள் அதை பற்றி எதுவும் பேசவில்லை.
“சொல்லுங்க... என்ன விஷயம்...” என்றாள்.
“நாளைக்கு நீ பிசியா? மத்தியானம் வெளியே போகலாமா? ஃப்ரைடே தானே... சும்மா ஷாப்பிங் போகலாம்...”
பாரதியின் முகத்தில் யோசனை கோடுகள் தோன்றின. கணவனுடன் வெளியில் செல்வது அவளுக்கும் மிகவும் பிடிக்கும் தான்... ஆனால் அவளால் நாளை அவனுடன் செல்ல முடியாதே... சற்று யோசித்து விட்டு,
“ம்ம்ம்ம்ம்ம்.... நாளைக்கு கொஞ்சம் கஷ்டம், ஒரு முக்கிய வேலை இருக்கு. சனிக்கிழமை போகலாமா?” என்றாள்.
திரும்பவும் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவள் மறுத்ததற்காக மட்டும் அல்ல. நாளை மறுநாள் அவன் பிறந்த நாள் என்பது அவளுக்கு நினைவில் இல்லை என்பது புரிந்ததாலும்...
“பரவாயில்லை... அப்புறம் வேற ஒரு நாள் போகலாம்...” என்று மட்டும் அப்போதைக்கு