“சூப்பர்...”
“அப்புறம்... இந்தாங்க...” என்று அருகில் இருந்த ஒரு கவரை எடுத்து அவன் கையில் கொடுத்தாள்.
ஆர்வத்தோடு வாங்கி பார்த்தவன், அவனுக்கு பிடித்த ப்ளூ நிறத்தில் சட்டை இருப்பதை பார்த்து ஆச்சர்யப் பட்டான்.
“வாவ்... இது எப்படி???”
“எல்லாம் அண்ணியோட டிப் தான்... அவங்க தான் எப்போதும் உங்களுக்கு ஷர்ட் வாங்கி தருவாங்களாமே... உங்களுக்கு ப்ளூ கலர் ரொம்ப பிடிக்கும்... அந்த பாட்டுல அஜித் போட்டுட்டு வர ப்ளூ கலர் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனால் அந்த கலர்ல உங்க கிட்ட ஷர்ட் இல்லை...”
“ஓஹோ... இது தான் நேத்து அவ்வளவு மும்முரமா நீங்க அந்த பாட்டை பார்த்த ரகசியமா?”
“ம்ம்ம்...” என்று தலை ஆட்டினாள் பாரதி.
“இன்னும் ஏதாவது சர்ப்ரைஸ் மீதி இருக்கா?”
“இருக்கே... ஒன்னே ஒன்னு...” என்றபடி மீண்டும் அருகில் இருந்த கவரை எடுத்து அவன் கையில் கொடுத்தாள் பாரதி.
“இன்னும் என்ன?” கேட்டபடி ஆவலோடு பிரித்து பார்த்தான் விவேக்.
உள்ளே, கார் மொபைல் சார்ஜர் மற்றும் ப்ளூ டூத் செட் இருந்தது.
“வேலை வேலைன்னு பாதி நேரம் மொபைல் சார்ஜ் பண்ண மறந்துடுவீங்க... அப்புறம்