வந்தான்... வீடு இருட்டாக இருந்தது... இருட்டில் என்ன செய்கிறாள்?
“பாரதி...”
அவன் குரலுக்கு பதில் சொல்வது போல் பல சிறு விளக்குகள் மின்னின... அவன் ஆச்சர்யத்தோடு பார்க்கும் போதே, பல விளக்குகள் மின்ன அவன் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் செய்திக்கு அருகில் நின்றபடி,
“ஹாப்பி பர்த்டே விவேக்...” என்றாள் பாரதி.
“இதெல்லாம்...” கேள்வியை கேட்கும் முன்னரே அவனுக்கு பதில் புரிந்து போனது. இதையெல்லாம் அவளால் தனியாக செய்ய இயலாது. அது தான் விஜய் உதவியை அவள் நாடிய ரகசியம். அவனிடம் மறைத்ததும் அவனுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்க தான்... ட்யுப் லைட்டின் சோக் திடீரென வேலை செய்யாததும் இதனால் தானா? பதில் புரிந்து அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மறைக்காது மனைவியிடமும் அதையே சொன்னான்..
“வாவ்... செம சர்ப்ரைஸ் பாரதி... தேங்க்ஸ்... விஜய் ஹெல்ப் செய்தாரா??”
“ஆமாம்... நீங்க தி.நகர்ல பார்த்தீங்களா?”
ஆம் என்று அவன் தலை ஆட்டும் போதே, மீண்டும் அவள் பதிலில் ஏதோ வேறுபாடு இருப்பதாக தோன்றியது. ஆனால் அவனை ரொம்ப யோசிக்க இடம் கொடுக்காது,
“வாங்க பர்த்டே பேபி, வந்து கேக் கட் பண்ணுங்க....” என்றாள் பாரதி.
கேக் வெட்டி, மனைவிக்கு ஊட்டி விட்டு விட்டு, அவனும் சாப்பிட்ட பிறகு,
“அவ்வளவு தானா? கிஃப்ட் எல்லாம் இல்லையா?” என்று அவளைக் கேட்டான்.
“இல்லாமல் என்ன... உங்க ஒவ்வொரு பர்த்டேக்கும் நடக்குற மாதிரியே நாளைக்கு உங்களுடைய ஃபேவரைட் டிஷ் எல்லாம் ரெடி பண்ண போறேன்... இது அத்தையோட டிப்...”