ஹாலில் ஏதோ தொலைக் காட்சி நிகழ்ச்சியை ஓட விட்டு பார்த்தபடி பாரதி அமர்ந்திருந்தாள். வழக்கமாக பளிச்சென்று ஒளி வீசும் விளக்கை மட்டும் காணவில்லை. மெல்லிய விடிவிளக்கின் வெளிச்சம் தான் இருந்தது.
“ட்யுப் லைட் என்ன ஆச்சு? ஏன் இப்படி இருட்டில உட்கார்ந்திருக்க?”
“சோக் பிரச்சனைன்னு நினைக்கிறேன்... இப்போ தான் ஹால் பக்கம் வந்தேன்...” என்றாள் பாரதி.
அவள் குரலில் ஏதோ வித்தியாசம் இருப்பதாக தோன்றியது... என்ன ஏது என்று அதை பற்றி யோசிக்காது,
“என்ன வெயில் இன்னைக்கு... மத்தியானம் தி.நகர் போக வேண்டி இருந்தது... வெயில் காய்ச்சி எடுத்துருச்சு..” என் சொல்லி, அவளாக அவள் கடைக்கு சென்றதை சொல்லட்டும் என்று அவன் எடுத்து கொடுத்தான். ஆனால் அவன் ஆவலோடு காத்திருப்பதை அறிந்துக் கொள்ளாதது போல்,
“அப்படியா? சரி அதெல்லாம் அப்புறம் பேசலாம், ரொம்ப லேட் ஆயிடுச்சே... சீக்கிரம் போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்து சாப்பிடுங்க...” என்றாள் பாரதி. ஏமாற்றத்தை விழுங்கி விட்டு, கடுப்புடன் சென்றான் விவேக்.
❀✿❀✿❀✿
அன்று தூங்கும் முன், அவளிடம் அவன் அவளுக்காக வாங்கி இருந்த சேலையை தரலாமா என்று யோசித்தவன்... வேண்டாம் என முடிவு செய்தான். நாளை அவளிடம் கொடுத்து விட்டு, அவனின் பிறந்த நாளை நினைவுப் படுத்திவிட்டு, அவளை வெளியே அழைத்து செல்வது என்று முடிவு செய்தான்.
வழக்கம் போல் விரைவில் தூங்கி போனவன், ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்தான். இருட்டில் ஒன்றும் புரியவில்லை. அருகில் பாரதி இல்லை என்பது புரிந்தது. இன்னுமா அவள் தூங்க வில்லை? என்ன சத்தம் கேட்டது? பல கேள்விகளுடன் மனைவியை தேடி வெளியில்