(Reading time: 11 - 22 minutes)
சிறுகதை - மனைவி அமைவதெல்லாம்... - பிந்து வினோத்
சிறுகதை - மனைவி அமைவதெல்லாம்... - பிந்து வினோத்

முக்கியமான கால் அட்டென்ட் பண்ண முடியலை அப்படி இப்படின்னு புலம்புவீங்க... அதுக்கு தான் இந்த கார் கம் நார்மல் சார்ஜர்... இன்னொரு தடவை சார்ஜ் இல்லாமல் தான் போன் செய்ய முடியலைன்னு நீங்க சொல்ல கூடாது இல்லை... இது என்னுடைய ஸ்பெஷல் கிஃப்ட்...”

   

அவனின் தேவை உணர்ந்து, புரிந்துக் கொண்டு பரிசு வாங்கிய மனைவியை பார்த்து பெருமையாக இருந்தது விவேக்கிற்கு. ஆனால் சட்டென்று ஏதோ தோன்றவும்

   

“ஏன் பாரதி... நீ என்கிட்டே ஏதோ கேட்கனும்னு நினைக்கிறீயா என்ன?” எனக் கேட்டான். முதலில் ஆச்சர்யப்பட்ட பாரதி, சற்றே தயங்கிவிட்டு, “உங்களை நானும் தி.நகர்ல பார்த்தேன்...” என்று இழுத்தாள்...

   

“ஒ! ஆமாம்... சுமியோட வந்தேன்...”

   

அவள் முகத்தில் ஆவல் தோன்றவும்,

   

“சுமியோட பார்த்ததால தப்பா நினைச்சீயா என்ன?” என மனதில் தோன்றியதை மறைக்காது கேட்டான் விவேக்.

   

“இல்லை... சின்ன கேள்வி அவ்வளவு தான்... நீங்க விஜயோடு என்னை பார்த்து தப்பா நினைக்காததிலேயே உங்க மனசில தப்பா எதுவும் இல்லைன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு...”

   

“நான் தப்பா நினைக்கலைன்னு உனக்கு எப்படி தெரியும்?”

   

“காமன் சென்ஸ் தான்... அப்படி ஏதாவது நினைச்சிருந்தா ஒன்னு அங்கேயே வந்து திட்டி இருப்பீங்க... இல்ல வீட்டுக்கு வந்த பிறகாவது திட்டி இருப்பீங்க... நீங்க, நானே சொல்லனும்னு தானே நீங்க தி.நகர் வந்ததை பத்தி பேச்சை எடுத்தீங்க?”

   

“ம்ம்ம்... ரொம்ப புத்திசாலி தான்... ஒரு நிமிஷம் இரு...” என்று சொல்லி விட்டு, அவர்கள் அறையில் வைத்திருந்த, சேலையை எடுத்து வந்து கொடுத்தான்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.