சொல்லி வைத்தான்!
❀✿❀✿❀✿
மறுநாள், அலுவலகத்தில் வேலைக்கு நடுவே விவேக்கிற்கு பாரதியின் நினைவு வந்தது. ‘சாரி’ சொல்லா விட்டால் என்ன, அவளுக்கு ஏதேனும் பரிசு வாங்கி கொடுக்கலாமே. அவனுடைய பிறந்த நாளுக்கு அவள் தான் பரிசு வாங்கி தர வேண்டும் என்றில்லையே.... அவனும் கூட அவளை ஆச்சர்யப்படுத்தும் விதமாக வாங்கி தரலாமே. யோசித்து அவளுக்கு சேலை வாங்கி பரிசளிப்பது என்று முடிவு செய்தான். ஆனால் அவனுக்கு சேலை தேர்ந்தெடுத்து பழக்கமில்லை. அவன் அம்மாவுடனும் அக்காவுடனும் கடைக்கு செல்வானே தவிர அவர்கள் சேலை தேர்வு செய்யும் போது உடனிருக்க மாட்டான். சற்று சிந்தித்து விட்டு, அவனுடைய அலுவலக தோழி சுமியை கூட வந்து சேலை தேர்வு செய்து தர அழைத்தான். அவளும் மறுக்காமல் சரி என்று சொல்லவே, உடனேயே கிளம்பி புதுவித சேலைகளுக்கு புகழ் பெற்ற அந்த ஜவுளிக் கடையை அடைந்தான். காரை நிறுத்தி விட்டு, சுமியுடன் பேசியபடி வந்தவன், எதிரில் கண்ட காட்சியில் சற்று திகைத்துப் போனான்.
அவர்கள் இருந்த கடைக்கு எதிர் பக்கத்தில் இருந்த இன்னொரு கடையின் அருகில் அவன் மனைவி அருகில் வேறு ஒருவனோடு சிரித்து பேசியபடி வெளியே வந்துக் கொண்டிருந்தாள். பாரதியோடு இருப்பது அவளின் கல்லூரி தோழன் விஜய் என்பது புரிந்தது. ஆனாலும் விஜயோடு வெளியே போகிறேன் என்று நேற்றே அவனிடம் சொல்லி இருக்கலாமே... கணவனை விட இவன் முக்கியமாகி விட்டானா? இப்படி விவேக்கின் மனம் பல கேள்விகளோடு குழம்பும் போதே, அவனை மீண்டும் உலகத்திற்கு அழைத்து வருவது போல், “ஹே விவேக் அங்கே எங்கே போற, இந்த பக்கம், வா...” என்ற சுமியின் குரல் அவன் காதில் ஒலித்தது.
எதிர் பக்கத்தை மீண்டும் ஒரு தரம் பார்த்து முறைத்து விட்டு, திரும்பி உள்ளே சென்றான் விவேக்.
❀✿❀✿❀✿
அன்று வழக்கத்திற்கு மாறாக தாமதமாகவே வீட்டிற்கு சென்றான் விவேக். வழக்கம் போல்,