(Reading time: 9 - 18 minutes)
சிறுகதை - இதற்கு பெயர் தான் காதலா?

நின்றான்.

   

ஆறு வருடங்களான பின்பும், கணவனின் குறையாத காதலிலும், அந்த காந்த பார்வையிலுமாக மனதினுள் எழுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் வெளி காட்டாதிருக்க முயன்றபடி,

   

“போதும் போதும், பார்த்தது, கிளம்புங்க, டைம் ஆச்சு...” என்றாள்.

   

“ம்ம்ம்... சரி கிளம்புறேன்... ஈவ்னிங் உனக்கு ஏதாவது வாங்கி வரணுமா?”

   

நீயாக எதை வாங்கி வந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று மனதினுள் நினைத்தவள், அதை சொல்லாது,

   

“ப்ச்... அது மட்டும் தான் குறைச்சல்... எனக்கு எதுவும் வேண்டாம்...” என்றாள்.

   

ஒரு வினாடி ஆச்சர்யமாக பார்த்தவன், நேரமாகி விட்டதை உணர்ந்து மேலும் எதையும் கேட்காது கிளம்பினான்.

   

❀✿❀✿❀✿

   

அதன் பின் பிருந்தாவிற்கு நேரம் இறக்கை கட்டி பறந்தது... இரட்டையர்களான அவர்களின் குழந்தைகளை செல்லம் கொஞ்சி, மிரட்டி, அதட்டி என பல் துலக்கி, குளிக்க வைத்து, உணவு ஊட்டி விட்டு, பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தவள், மீண்டும் மதியம் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்து, அவர்களுக்கு உணவு ஊட்டி விட்டு, தூங்க வைத்து, மாலை சிற்றுண்டி கொடுத்து முடித்த போது விஷ்ணு வீடு திரும்பினான்...

   

காலை ஷிப்டில் பணி புரிவதால், காலை ஆறு மணிக்கு சென்று மாலை மூன்றரைக்கு வீடு திரும்புவான் விஷ்ணு. அன்றும் நேரத்திற்கு திரும்பியவனிடம் ஒரு சிறு பூவையாவது எதிர்பார்த்து ஏமாந்து போனாள் பிருந்தா.

   

❀✿❀✿❀✿

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.