(Reading time: 9 - 18 minutes)
சிறுகதை - இதற்கு பெயர் தான் காதலா?

   

“க்கும்... உங்களுக்கு என்னை பற்றி ரொம்ப தெரியுமாக்கும்... நீங்கள் சொல்வது போல் எல்லாம் ஒன்றுமில்லை...”

   

என்றுமில்லாத அதிசயமாக அடம் பிடிக்கும் மனைவியை ஆச்சர்யமாக பார்த்த விஷ்ணு,

   

“எனக்கு உன்னை பற்றி தெரியாதுன்னு யார் சொன்னது?”

   

“யார் சொல்லனும்? எனக்கே தெரியும்! இது வரைக்கும் ஒரு தடவையாவது எனக்கு என்ன பிடிக்கும்னு புரிந்து என்னை கேட்காமல் நீங்களே ஒரு குண்டூசியாவது வாங்கி கொடுத்து என்னை ஆச்சர்யப்படுத்தியதா சரித்திரம் உண்டா?”

   

“பிருந்தா!”

   

“நமக்கு அப்புறம் கல்யாணமானவங்க கூட மனைவிக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க...”

   

“மத்தவங்களை விடு... நம்ம விஷயம் அப்படி இல்லைடா...”

   

“ப்ச்... அது எப்படியோ போகட்டும்... என் வாழ்க்கை இப்படி தான்... இந்த பேச்சை விடுங்க...”

   

அவளின் சொல்லை ஏற்றுக் கொண்டது போல் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான் விஷ்ணு.

   

பிருந்தாவின் மனதில் கோபமும் எரிச்சலும் கலந்து பொங்கியது!

   

அவள் தான் பேச்சை விட சொல்லியாகி விட்டதே, இனி அவன் பேச மாட்டான்... ச்சே ஏன் இவன் இல்லை இவர் இப்படி இருக்கிறார்?

   

❀✿❀✿❀✿

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.