வேற இருந்தது... நான் போய் வருவதற்குள் உங்க அப்பா உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டால் என்ன செய்வது? இப்படி எல்லாம் யோசிச்சு தான் அன்று உன்னை பார்க்க வந்த போது, உடனே நிச்சயதார்த்தம் வைக்கனும், முடிந்த அளவு சீக்கிரமே கல்யாண நாள் பார்க்கனும்னு அம்மாவிடம் சொல்ல சொன்னேன்...”
“...”
அமைதியாக இருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு கட்டிலில் இருந்து எழுந்து சென்று அருகே இருந்த அவனுடைய மேஜையை திறந்து சின்ன பெட்டியை எடுத்துக் கொண்டு அவளருகில் மீண்டும் வந்து அமர்ந்தவன்,
“இதில் என்ன இருக்கு சொல்லு பார்ப்போம்?”
“ஹுஹும்... தெரியலையே...”
“சும்மா கெஸ் செய்யேன்...”
“ம்ம்ம்...”
“சரி சரி, உன்னுடைய மூளை காலையில் இருந்தே ரொம்ப ஓவர் வொர்க் செய்து இருக்கு அதை இன்னும் தொல்லை செய்ய வேண்டாம்... நீயே திறந்து பார்...”
அவன் சொன்னதை கேட்டு முறைத்தவள், கோபத்தையும் மீறி ஆர்வம் பொங்க அதை வாங்கி திறந்து பார்த்தாள்...
உள்ளே சிவப்பு நிற கண்ணாடி வளையல் துண்டுகள் இருந்தன!
“இது என்ன தெரியுதா? அன்னைக்கு கோவிலில் உடைந்த உன் வளையல் துண்டுகள்... பத்திரமா எடுத்து வச்சிருக்கேன்...”
சொல்லிவிட்டு எப்போதும் போல் அவளின் கரத்தை எடுத்து அந்த சின்ன தழும்பினை