(Reading time: 9 - 18 minutes)
சிறுகதை - இதற்கு பெயர் தான் காதலா?

பரிவுடன் வருடியவன்,

   

“சாரி கண்ணா உன் ஆசையை தெரிந்திருந்தும் என்னுடைய பேராசையால் உன் வாழ்கையை நான் மாற்றி எழுதிட்டேன்... அதனால் தான் நம்முடைய இந்த வாழ்க்கையில் எப்போதும் உனக்கு பிடித்தததாகவே எல்லாமே இருக்கனும்னு முடிவு செய்தேன்... நான் உனக்கு தரும் சர்ப்ரைசை விட உனக்கு பிடித்ததாக எல்லாமே இருக்கனும்னு தான் உன்னிடம் கேட்டு எப்போதும் எதையும் செய்வது, வாங்குவது எல்லாம்... சாரி திரும்பவும் உன் மனதில் இருக்கும் ஆசையை புரிந்துக் கொள்ளாமலே இருந்துட்டேன்...”

   

அவன் சொல்வதை நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள், அவன் பேச்சில் ஒலித்த வருத்தம் மனதை சுட,

   

“என்னங்க நீங்க! நான் படிக்கனும்னு சொன்னது என்னவோ நிஜம் தான்... ஆனால் உங்களை பார்த்த பிறகு, உங்களுடன் அன்று பேசிய பிறகு என்னுடைய மனசும் மாறி போச்சு... நீங்களே சொல்லி இருந்தால் கூட நான் கல்யாணத்தை தள்ளி போட்டிருக்க மாட்டேன்...” என்றபடி கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

   

“நிஜமாவா சொல்ற?”

   

“நிஜமா!”

   

“ம்ம்ம்... இத்தனை வருஷத்தில் நீயாகவே என்னை இப்படி கட்டி பிடிச்சதா சரித்திரம் உண்டா?” என்று பிருந்தாவை போலவே பேசி காட்டியவன், தொடர்ந்து,

   

“அவ்வளவு ஏன், நமக்கு கல்யாணமான புதிதில் உன்னை என்னோட சாதாரணமாக பேச வைக்கவே எனக்கு ஒன்னு இரண்டு மாசம் ஆச்சு... இந்த கண்ணாடி துண்டுக்கு இருக்கும் மதிப்பு எனக்கில்லைப்பா!” என்றான்.

   

அவனின் கேலி பேச்சைக் கேட்டு,

   

“போங்க...” என்று சிணுங்கி அவனின் மார்பில் செல்லமாக குத்தியவள், ஒரு சில வினாடிகள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.