(Reading time: 9 - 18 minutes)
சிறுகதை - இதற்கு பெயர் தான் காதலா?

   

இரவு, கதை கேட்டபடி தூங்கி போன குழந்தைகளை படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டவள், கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி டி.வியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்த கணவனின் அருகில் சென்று அமர்ந்தாள். அதற்காகவே காத்திருந்தவன் போல்,

   

“என்ன விஷயம் கண்ணா, ஏன் இன்னைக்கு டல்லா இருக்க?”

   

“அதெல்லாம் ஒன்னுமில்லையே....” மனதிலிருப்பதை சொல்லாமல் மறைத்து பொய் சொன்னாள் அவள்.

   

“இல்லை நீ காலையில் இருந்தே வித்தியாசமா தான் இருக்க... உடம்பு ஏதாவது சரி இல்லையா?”

   

“ப்ச்...”

   

“ஏன் இந்த அலுப்பு?”

   

“ஒன்னுமில்லை...”

   

“என்னவோ இருக்கே செல்லம்...”

   

“க்கும்... இந்த செல்லம் கொஞ்சலுக்கு எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை...”

   

“வேற எதில் குறைச்சல்?” ஒரு புன்னகையோடு கேட்டவன், எப்போதும் போல் அவளின் வலது கரத்தை எடுத்து, அதில் மணிக்கட்டின் சற்று கீழே இருந்த அந்த தழும்பை வருடினான்.

   

“ப்ச்.. கையை விடுங்க எனக்கு தூக்கம் வருது...”

   

“ம்ம்ம்... தூங்கு, ஆனால் அதற்கு முன் உன் மனதில் இருக்கும் அந்த ஏதோ ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லு...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.