சரி என தலை அசைத்து விட்டு தோட்டம் நோக்கி சென்றாள் பிரீதா. குழப்பங்கள் தெளிவாகிறதோ இல்லையோ, அவன் அன்று சமயத்தில் செய்த உதவிக்கு நன்றியாவது சொல்ல வேண்டுமே...
வாய்ப்பு கிடைத்தால் ஒரு மன்னிப்பையும் சொல்லலாம்...
தோட்டத்தின் ஒரு புறமாக இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வினய், பிரீதாவின் காலடி ஓசை கேட்டு திரும்பி பார்த்து, அவளை அங்கே எதிர்பாராது பார்த்ததின் அறிகுறியாக முகத்தில் ஆச்சர்யத்துடன், என்ன என்பது போல் பார்த்தான்.
தொண்டையில் சிக்கி இருந்த வார்த்தைகளை முயற்சி செய்து வெளியே கொண்டு வந்து,
“உங்க ஹெல்புக்கு ரொம்ப தேங்க்ஸ்... இவ்வளவு நாள் சொல்ல சான்ஸ் கிடைக்கலை...” என்றாள்.
அவன் புரியாதவனாக கேள்வியாக பார்த்தான்.
“இங்கே இந்த கம்பேனியன் வேலை நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்... சுமித்ரா சொன்னாங்க நீங்க தான் ஹெல்ப் செய்தீங்கன்னு...”
அவன் அப்போதும் சிந்தனையை முகத்தில் காட்டவும்,
“இரண்டு வருஷம் முன்பு... “ என்றாள் பிரீதா அவசரமாக.
“ஓ! இப்போ தான் ஞாபகம் வருது... வாவ், இரண்டு வருஷமா இங்கே பாட்டியோடவே இருக்கீங்களா, நீங்க கிரேட்ங்க... ஆனால் தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு? மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்யாமல் எப்படி?”
“ம்ம்ம்...”