அவளை ஒரு பார்வை பார்த்த விஜி,
“அவன் நாளைக்கு இங்கே வரான்... அவனிடம் கொஞ்சம் கேர்புலா இருங்க பிரீதா... அவன் ஒரு மாதிரி... இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்க நல்லதிற்காக தான் சொல்றேன்... அவனை கெட்டவன்னு சொல்ல முடியாது, நிறைய ஹெல்ப் எல்லாம் செய்வான் ஆனாலும் கூட...”
விஜி கொடுத்த எச்சரிக்கை பிரீதாவை குழப்பியது!
அவள் அறிந்த வரையில் வினய் மிகவும் கண்ணியமாக நடந்துக் கொள்பவன்... ஆனால் அவளுக்கும் அவனை பற்றி எவ்வளவு தெரியும்?
என்ன தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவன் செய்த உதவி மிக பெரிய விஷயம்! அவனிடம் நன்றியாவது சொல்ல வாய்ப்பு கிடைததிருக்கிறதே...
இரண்டு வருடங்களுக்கு பின் அவளை பார்க்கும் போது அவன் முகத்தில் எந்த விதமான உணர்வுகள் தோன்றும்? இன்னமும் அவனுடைய இதயத்தில் இடம் பெற்ற காதல் ராணியாக பார்ப்பானா இல்லை உன்னை பார்க்கவும் பிடிக்கவில்லை என்று பேசிய கோபக்காரியாக பார்ப்பானா?
அன்றிரவு முழுவதும் ஏதேதோ சிந்தனைகள், கனவுகள், கேள்விகள், குழப்பங்கள் என்று தூக்கமின்றி தவித்தவள், காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து தன்னுடைய செல்லங்களை பார்க்க சென்றாள்.
திரும்பி வீடு நோக்கி வந்தவள், உள்ளே இருந்து வந்த குரலைக் கேட்டு தவிப்புடன் நின்றாள்...
வினய்யின் குரல்! அவளுக்கு இன்னமும் அவனின் குரல் நினைவிருக்கிறதே...
இரண்டு ஆண்டுகள் கழித்து அவனை பார்க்க போகிறாள்... அவனிடமிருந்து காதல் பார்வை