(Reading time: 20 - 39 minutes)
சிறுகதை - காதல் கதை - பிந்து வினோத்
சிறுகதை - காதல் கதை - பிந்து வினோத்

   

“மம்மி போதும் மம்மி இந்த ப்ரூப் கதை எல்லாம்... எனக்கு பசிக்குது...”

   

அதன் பின் நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது... செல்லம்மாவை போலவே விஜியும், தேவியும் கூட அவளுடன் உறவினர் போலவே சாதாரணமாக பேசி பழகவும், பிரீதாவிற்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை.

   

அதிலும் விஜி அவளுடன் ரொம்பவே கலகலப்புடன் பேசி பழகினாள்... இருவரும் பிரீதாவின் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு வரும் போது, உள்ளே தேவி செல்லம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

   

“சிங்கப்பூரிலேயே இருந்தாலும் கூட நம்ம பிறந்த ஊர் பாசம் விட்டு போகுமா என்ன அத்தை? அது தான் இவளுக்கும், அவனுக்கும் நம்ம ஊரிலேயே வரன் பார்க்கலாம்னு இருக்கோம்...”

   

“நல்ல விஷயம் தானே தேவி...”

   

“நீங்க ப்ரீயா தானே இருக்கீங்க பிரீதா, பாட்டிக்கு தான் அம்மாவுடைய கம்பெனி இருக்கே, நீங்க என்னோட வாங்க...” என்றபடி பிரீதா பதில் சொல்லும் முன், அவளின் கை பற்றி அழைத்து சென்றாள் விஜி.

   

பல பல கதைகள் பேசி கொண்டிருந்தவர்கள்,

   

“இந்த போடோஸ் பாருங்க பிரீதா, இது தான் எங்க சிங்கப்பூர் வீடு... இது நானும் என் ப்ரெண்டும்... இது தான் என்னுடைய அப்பா... அப்புறம் இது அண்ணனும் நானும்...”

   

ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பிரீதா கடைசி போட்டோவை பார்த்து ஆச்சர்யப் பட்டாள். அதில் விஜியுடன் வினய் சிரித்துக் கொண்டிருந்தான்.

   

இது தானா அவளுக்கு இவர்கள் இருவரும் பரிச்சயமானவர்களாக தோன்றிய ரகசியம்?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.