வருமா இல்லை கோபப் பார்வை வருமா?
இதய துடி துடிப்பு அதிகரிக்க... மனதினுள் இருந்த ஆர்வத்தை வெளிக் காட்டாதிருக்க முயன்றபடி உள்ளே சென்றாள் பிரீதா!
வினய் அங்கே தான் இருந்தான்... அவனிடம் எந்த மாறுபாடும் அவளுக்கு தெரியவில்லை... இரண்டாண்டுக்கு முன் பார்த்தது போன்றே இருந்தான்...
அவன் அவளை கவனித்ததாக தெரியவில்லை, கையில் இருந்த போனில் எதையோ நொண்டிக் கொண்டிருந்தான்...
“பிரீதாம்மா... வா வா... இவன் தான் என் மகன் வினய்... வினய் இது தான் பிரீதா...”
பலவித எதிர்பார்ப்போடு வினய் பக்கம் புன்னகையுடன் பார்த்த பிரீதா திகைத்தாள்.
அவனிடம் கோபமும் இல்லை, காதலும் இல்லை! புதிதாக பார்ப்பவரிடம் தரும் ஒரு ரெடிமேட் புன்னகை மட்டுமே இருந்தது...
அவள் திகைத்து நின்றதை அவன் கவனித்தானோ இல்லையோ, தேவியிடம் எதையோ கேட்டபடி உள்ளே சென்றான்...
பிரீதாவின் இதயத்தில் இருந்து ரத்தம் கசிந்தது...
அப்போதென்று இல்லை... தொடர்ந்து வந்த சந்திப்புக்களில் எல்லாமே வினய் ஏதோ புதியவளிடம் பழகுவதை போல் தான் அவளிடம் பழகினான் பேசினான்... அவளின் தோட்டத்தை பற்றி பாராட்டினான்... உழைப்பை புகழ்ந்தான்... அதற்கு மேல் தங்கை, அம்மா, பாட்டி என்று அவர்களுடனே நேரத்தை செலவிட்டான்...
வினய் அவளை மறந்து விட்டானா?
பிரீதாவால் நம்ப முடியவில்லை!