இல்லை அவன் அப்படி பட்டவன் இல்லை...
அவனிடம் அவளை பற்றி நினைக்க கூட கூடாது என்று சொன்னவள் அவள் தானே?
ஆனால் அவன் தானே இங்கே செல்லம்மாவின் வீட்டிற்கு அவளை அனுப்பி வைத்ததும்?
ஒருவேளை அது ஆதரவற்று நிற்கும் ஒரு பெண்ணிற்காக செய்ததோ? யாராக இருந்தாலும் அதையே தான் செய்திருப்பானோ? விஜியும் கூட அப்படி ஏதோ தானே சொன்னாள்?
ஆனால் அவன் அன்று சொன்ன காதல்? அது....?
கண்ணால் பார்க்காத விஷயம் கருத்தில் இருந்து மறைந்து போகும்...
எங்கேயோ எப்போதோ படித்த வரி இப்போது நினைவில் வந்தது!
வினய் அவளை மறந்தே தான் போய் விட்டானா?
பிரீதாவால் தாங்க முடியவில்லை... ஆனால் அவளின் வருத்தத்தை வெளியிலும் காட்ட முடியவில்லை... என்ன ஏது என்று யாரேனும் கேட்டால் என்ன சொல்வது?
அதன் பின் முடிந்த அளவில் பிரீதா தனிமையை விரும்பினாள்... மற்றவர்களின் கேள்விக்கு, குடும்பத்தினர் ஒன்றாக செலவிடும் போது நடுவில் நான் எதற்கு என்று ஒரு நொண்டி சமாதானம் கூறினாள்...
இருளில் ஒன்றும் தெரியாத சூனியத்தை வெறித்து பார்த்த படி அமர்ந்திருந்த பிரீதா, தோளில் பதிந்த கரத்தின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு திரும்பினாள்.
செல்லம்மா நின்றிருந்தார்.