சொன்னேன்னு யோசிச்சு அழுதிருக்கேன்...”
பேச்சு வேகத்தில் பேசிய பிரீதா, தன் மனதில் மறைத்து வைத்திருந்ததை சொல்லி விட்டதை தாமதமாக புரிந்துக் கொண்டு விழித்தாள்!
“நோ சொன்னது பிடிக்காமல் அழுதீங்களா, அப்போ என்ன சொல்லலைன்னு பீல் செய்தீங்க?”
வினய்யின் குரலில் கேலி இருந்ததோ? பின் அவன் ஏன் கேலி செய்ய மாட்டான்? அவளை அவன் முழுவதுமாக நினைவில் இருந்தே அகற்றிய பிறகு இப்படி அவள் வந்து உளறினால் வேறு என்ன செய்வான்?
பிரீதாவின் கண்களில் இருந்து ஒன்றிரண்டு கண்ணீர் துளிகள் கொட்ட துவங்கியது...
அது வரை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வினய்,
“பிரீதா, என்ன இது? ப்ளீஸ் அழாதே... ப்ளீஸ்டா...”
அவனின் பேச்சு மாறிய தோரணையில் பிரீதா கண்ணீர் ததும்பிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவசரமாக அவளின் அருகில் வந்து கண்ணீரை துடைத்தவன், அவளை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டான்.
“இப்போ தானே சந்தோஷமான விஷயத்தை சொன்ன அதற்குள் எதற்கு இந்த அழுகை... ஒரு நிமிஷம் இரு அந்த பிசாசுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிட்டு வரேன்....”
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவன் செல்போனை எடுத்து மெசேஜ் அனுப்புவதை பார்த்தபடி நின்றாள் பிரீதா.
மெசேஜ் அனுப்பிவிட்டு, செல்போனை பாக்கெட்டினுள் வைத்தவன்,