(Reading time: 20 - 39 minutes)

வனிடம் கோபமும் இல்லை, காதலும் இல்லை! புதிதாக பார்ப்பவரிடம் தரும் ஒரு ரெடிமேட் புன்னகை மட்டுமே இருந்தது...

அவள் திகைத்து நின்றதை அவன் கவனித்தானோ இல்லையோ, தேவியிடம் எதையோ கேட்டபடி உள்ளே சென்றான்...

பிரீதாவின் இதயத்தில் இருந்து ரத்தம் கசிந்தது...

ப்போதென்று இல்லை... தொடர்ந்து வந்த சந்திப்புக்களில் எல்லாமே வினய் ஏதோ புதியவளிடம் பழகுவதை போல் தான் அவளிடம் பழகினான் பேசினான்... அவளின் தோட்டத்தை பற்றி பாராட்டினான்... உழைப்பை புகழ்ந்தான்... அதற்கு மேல் தங்கை, அம்மா, பாட்டி என்று அவர்களுடனே நேரத்தை செலவிட்டான்...

வினய் அவளை மறந்து விட்டானா?

பிரீதாவால் நம்ப முடியவில்லை!

இல்லை அவன் அப்படி பட்டவன் இல்லை...

அவனிடம் அவளை பற்றி நினைக்க கூட கூடாது என்று சொன்னவள் அவள் தானே?

ஆனால் அவன் தானே இங்கே செல்லம்மாவின் வீட்டிற்கு அவளை அனுப்பி வைத்ததும்?

ஒருவேளை அது ஆதரவற்று நிற்கும் ஒரு பெண்ணிற்காக செய்ததோ? யாராக இருந்தாலும் அதையே தான் செய்திருப்பானோ? விஜியும் கூட அப்படி ஏதோ தானே சொன்னாள்?

ஆனால் அவன் அன்று சொன்ன காதல்? அது....?

கண்ணால் பார்க்காத விஷயம் கருத்தில் இருந்து மறைந்து போகும்...

எங்கேயோ எப்போதோ படித்த வரி இப்போது நினைவில் வந்தது!

வினய் அவளை மறந்தே தான் போய் விட்டானா?

பிரீதாவால் தாங்க முடியவில்லை... ஆனால் அவளின் வருத்தத்தை வெளியிலும் காட்ட முடியவில்லை... என்ன ஏது என்று யாரேனும் கேட்டால் என்ன சொல்வது?

அதன் பின் முடிந்த அளவில் பிரீதா தனிமையை விரும்பினாள்... மற்றவர்களின் கேள்விக்கு, குடும்பத்தினர் ஒன்றாக செலவிடும் போது நடுவில் நான் எதற்கு என்று ஒரு நொண்டி சமாதானம் கூறினாள்...

ருளில் ஒன்றும் தெரியாத சூனியத்தை வெறித்து பார்த்த படி அமர்ந்திருந்த பிரீதா, தோளில் பதிந்த கரத்தின் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு திரும்பினாள்.

செல்லம்மா நின்றிருந்தார்.

“தூக்கம் வரலையா பிரீதா?”

“இல்லை அம்மா... மணி ஏழு தானே ஆகுது... நீங்க தூங்க போறீங்களா?”

“ஆமாம்... நீ ஏன் ரொம்ப டல்லா இருக்க?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அம்மா...”

“ஒன்னுமில்லையா, இல்லை அந்த வினய்யினாலா?”

என்ன சொல்வதென்று புரியாமல் திகைத்து பார்த்தாள் பிரீதா!

“என்ன பார்க்குற? உன்னை இங்கே வேலைக்கு அனுப்பியதே அவன் தானே? ஆனால் ஏதோ தெரியாதவன் போல நடிக்குறான்....”

“...”

“என்ன விஷயம் பிரீ?”

என்னவென்று சொல்வது? பிரீதா குழப்பத்துடன் செல்லம்மாவை பார்த்தாள்.

“சரி விஷயம் எதுவா வேணா இருந்துட்டு போகட்டும்... நீ ஏன் இப்படி ஒரு மூலையில் சோகமா உட்கார்ந்திருக்க? என்ன எதுன்னு அவனிடமே நேரா கேட்க வேண்டியது தானே?”

“ஆனால் அம்மா...”

“பிரீ, யாராவது ஒருத்தர் முதலில் பேசினால் தானே எல்லாம் சரி ஆகும்... உன்னை இப்படி பார்க்க எனக்கு பிடிக்கலை... அவன் வாக்கிங் போறேன்னு தோட்டத்துக்கு போனான்... இது நல்ல சந்தர்ப்பம் போய் பேசு... பேசினால் எல்லா குழப்பம் எல்லாம் சரியா போகும்... காலையில் உன்னை வழக்கமான உற்சாகத்துடன் பார்க்கணும், சரியா?”

ரி என தலை அசைத்து விட்டு தோட்டம் நோக்கி சென்றாள் பிரீதா. குழப்பங்கள் தெளிவாகிறதோ இல்லையோ, அவன் அன்று சமயத்தில் செய்த உதவிக்கு நன்றியாவது சொல்ல வேண்டுமே...

வாய்ப்பு கிடைத்தால் ஒரு மன்னிப்பையும் சொல்லலாம்...

தோட்டத்தின் ஒரு புறமாக இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வினய், பிரீதாவின் காலடி ஓசை கேட்டு திரும்பி பார்த்து, அவளை அங்கே எதிர்பாராது பார்த்ததின் அறிகுறியாக முகத்தில் ஆச்சர்யத்துடன், என்ன என்பது போல் பார்த்தான்.

தொண்டையில் சிக்கி இருந்த வார்த்தைகளை முயற்சி செய்து வெளியே கொண்டு வந்து,

“உங்க ஹெல்புக்கு ரொம்ப தேங்க்ஸ்... இவ்வளவு நாள் சொல்ல சான்ஸ் கிடைக்கலை...” என்றாள்.

அவன் புரியாதவனாக கேள்வியாக பார்த்தான்.

“இங்கே இந்த கம்பேனியன் வேலை நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்... சுமித்ரா சொன்னாங்க நீங்க தான் ஹெல்ப் செய்தீங்கன்னு...”

அவன் அப்போதும் சிந்தனையை முகத்தில் காட்டவும்,

“இரண்டு வருஷம் முன்பு... “ என்றாள் பிரீதா அவசரமாக.

“ஓ! இப்போ தான் ஞாபகம் வருது... வாவ், இரண்டு வருஷமா இங்கே பாட்டியோடவே இருக்கீங்களா, நீங்க கிரேட்ங்க... ஆனால் தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு? மனுஷனுக்கு மனுஷன் உதவி செய்யாமல் எப்படி?”

“ம்ம்ம்...”

அவன் அமைதியாக நிற்க, தொடர்ந்து எப்படி பேசுவது என்று தடுமாறினாள் பிரீதா...

இல்லை இன்று சொல்லி விட வேண்டும்... என்று மனதில் முடிவு செய்து, அவனை நேராக பார்த்து,

“உங்களிடம் இந்த தேங்க்ஸ் மட்டும் இல்லை ஒரு சாரியும் சொல்லாமல் நான் பென்டிங்கில் வைத்திருக்கேன்...”

“சாரியா எதுக்கு?”

“உங்களுக்கு இப்போ ஞாபகம் இருக்குமா தெரியலை... இரண்டு மூணு வருஷத்திற்கு முன் நீங்க ப்ரொபோஸ் செய்த போது நான் ரொம்ப ரூடா பதில் சொல்லிட்டேன்... ஐ ஆம் ரியல்லி சாரி...”

திக்கி திணறி பேசியவளை மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு பார்த்தவன்,

“ம்ம்ம்... எனக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ, உங்களுக்கு இன்னமும் நினைவு இருக்கே, ஆச்சர்யமா இருக்கு...”

“இல்லை... இப்போன்னு இல்லை, இந்த இரண்டு வருஷத்தில் ஒரு நாள் கூட நான் இதை பற்றி நினைக்காமல் இருந்தது இல்லை...”

“ம்ம்ம்...!!????”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.