(Reading time: 23 - 46 minutes)

 

யாருக்கு இந்த செய்து மாற்றத்தை தந்திச்சின்னு தெரியலை ஆனால் வைஜெயந்தி ஆன்ட்டிக்கு ஒரு மாற்றத்தை தந்திச்சு, தான் கணிச்சது தப்புன்னு புரிஞ்சது. பரிசுகளும் நகைகளும் மட்டும் காதலை வெளிபடுத்தும் வழி இல்லைன்னு புரிந்தது, இத்தனை நாளாய் கண்ணில படாத கணவனின் சேவையும் கண்ணில பட்டுச்சு. இந்த சம்பவத்துக்கு அப்பறம் கிளாரா என்ன பண்ண போராங்களோன்னு ரொம்ப கவலைப்பட்டேன். ஆனால் அவங்க என்னை ஏமாற்றலை, 3வது நாளே புது பெண்ணாய் வெளிய வந்தாங்க, இருக்கும் படிப்புக்கு ஒரு வேலையில் சேர்ந்து சொந்த காலில் நின்னாங்க, திருமணம் முடிஞ்சி பிரிஞ்சு தனியா இருக்க பெண்ணை எப்படியெல்லாம் பேசுவாங்கன்னு சொல்லவா வேணும் ஆனால் அது எதுக்கும் கிளாரா அசைந்து குடுக்கலை. தப்பான எண்ணத்தில ஒருத்தன் பக்கத்தில வந்தால் அவங்க பார்க்குற பார்வையிலேயே செத்துடுவான். அப்படி துணிஞ்சு நின்னாங்க. நான் பார்த்து வியந்த புதுமை பெண்ணுல இவங்களும் ஒன்னு ஆனாங்க.     

ப்படி எல்லாரும் ஒவ்வொரு விதமான உணர்வில் நாட்களை கடத்தும் போது, ஒருத்தருக்கு மட்டும் ரொம்ப சந்தோஷமான நாளாய் மாறிபோச்சு. அதான் நம்ம நிரஞ்ஜனாவுக்கு தான். நரேன் வந்திருந்தார், அவரை பார்த்ததும் அவங்க முகத்தில சந்தோஷத்தை பார்க்கணுமே சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது, இத்தனை நாட்கள் பிரிந்து இருந்ததுக்கு கிடைத்த பரிசு போல ஒரு நல்ல செய்தியும் கொண்டுவந்தாராம்.

“என்ன மாமா இப்படி பண்ணிட்டிங்க?”

“ஏன் உனக்கு பிடிக்கலையா ஜனா?”

“அப்படின்னு இல்லை... இருந்தாலும்...”

“எனக்கு பிடிக்குமேன்னு நீ இத்தனை நாளா உன் பயத்தை மறைக்கலை? நீ என் மனசை புரிஞ்சி நடந்திக்கும் போது என் மனைவியின் மனசை நான் புரிஞ்சி நடந்திக்க கூடாதா? அதான் மிலிட்டரி வேணாம்னு வந்திட்டேன்.”

“ரொம்ப தேங்க்ஸ்...”

“உதை விழும் ராஸ்கல், நீ என் ஜனாடி, எனக்கு புது ஜனனம் தந்தவள்”ன்னு ஒரே காதல் ரசத்தை புளியோ புளியினு புளிந்திருக்காறு முன்னால் ராணுவ நண்பர் நரேன். ஒருவழியாக நரேன் மனைவிக்காக மிலிட்டரிவிட்டு வந்திட்டாரு. வேறென்ன சுபம் தான்.

இங்க இருந்த 25 நாட்கள்ல என் வேலை முடிஞ்சிதோ இல்லையோ, நான் நிறையப் பார்த்து உணர்ந்துகிட்டேன். காதல் வயதரிந்து வருவதும் இல்லை அதுக்கு வரைமுறையும் இருப்பதில்லை. பாட்டி தாத்தா காட்டின ஒருவரது தேவையை மற்றவர் புரிந்துகொண்ட காதல் ஆக இருக்கட்டும், மனைவி இறந்த பின்பும் அவங்க கூடவே இருப்பதா நினைச்சு வாழும் சிவசுப்பிரமணியன் அங்கிளோட காதலாய் இருக்கட்டும், தன்னுடைய சரிபாதிகிட்ட குறையே இருந்தாலும் எர்த்துகிட்ட வரதராஜன் அங்கிளோட காதலாக இருக்கட்டும், கடைசியா காதல்னா விட்டுகொடுப்பது மட்டும் இல்லை, தன் துணையோட ஆசைக்கும் மதிப்பு கொடுப்பதும்தான்னு உணர்த்திய நிரஞ்ஜனா, நரேன் தம்பதி அனைவருமே ஒவ்வொரு வகையில் காதலை எனக்கு புரியவச்சாங்க. இதில் கிளாரா ஒன்னும் குறைந்து போகலை, தன்னாலும் தனியா வாழ முடியும்னு வாழ்ந்து காட்டுற அவங்க வீரம் எனக்கு பிடிச்சுது.

அவங்க காட்டின காதல் பொய்யில்லை ஆனால் அந்த காதலுக்கு ஒரு தகுதியான துணை கிடைக்கலை. இதில் நல்ல விஷயம் என்னன்னா அவங்க காதலை வெறுக்களை.

ஒரு உணவில் சங்கமிக்கும் வெவ்வேறு உணவு பொருட்களும் சேர்ந்து நாவினிக்க சுவை தருவதுப்போல, வைஜெயந்தி விலாஸ்யில் உள்ள குடும்பங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு சுவையான உணர்வினை என்னுள் விதைத்துவிட்டனர்.

அய்யயோ மணி 9.30 ஆகிடுச்சு, எனக்கு நேரம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன். ஒருவேளை இந்த கதையும் முகமூடியை போல உங்களை கவர்ந்தால் மீண்டும் அடுத்த கதையில் உங்களை சந்திக்குறேன்.     

This is entry #17 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.