(Reading time: 21 - 41 minutes)

 

தெல்லாம் ஒன்னுமே கிடையாது...அவரை காலேஜ் டேஃஸில் பார்த்திருக்கனும்..12பி ஷாம் மாதிரி இருப்பார் பார்க்க....எங்க வீட்டுக்கு கூட வந்திருக்கார்...நானே பார்த்திருக்கேன்...ஹிப்பாப்....சூப்பரா ஆடுவார்...ஃபுட்பால் ப்ளேயர்.....அவர் ஸ்பீச்....அவர் கார்னு அவருக்குன்னு பெரிய ஃபஅன்ஸ் கூட்டமே உண்டு... எங்க அண்ணா சொன்னான்...அவர்ட்ட ப்ரோபஸ் பண்ண ஒரு பொண்ணு சூசைட் அட்டம்ட்...பிழச்சிட்டா...இருந்தாலும்...இங்க நம்ம டிபார்ட்மென்டில் கேர்ள்ஸ் அதிகம்னு ...தேவை இல்லாம யார் கவனமும் தன் மேல வர கூடாதுன்னு...இப்படி...

உனக்கு தான் தெரியுமே ...அவர் வந்த புதுசில இருந்து இந்த வர்ஷா க்ரூப் செய்ற அட்டகாசம்...இப்ப வரைக்கும் டவுட்னு ....தேவை இல்லாம போய் அவர் முன்னாடி நின்னுட்டு வந்து...ஏதாவது கதை சொல்லுங்க அதுங்க...அவர் திட்ட ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் குறச்சிருக்குதுங்க அந்த குரங்குங்க அட்டகாசத்தை...அதுமாதிரி கேன எதுவும் அவர்ட்ட போய் ஐ லவ் யூன்னு ஆர்பாட்டம் செய்துட்டுன்னா....

அந்த கௌதம் க்ரூப்...எப்ப பார்த்தாலும் இதையும் அதையும் சொல்லி பணம் கலெக்ட் பண்ணி டாஃஸ்மார்க் போவாங்க....அப்படி ஒரு நாள் அவனுங்க பணம் கலெக்ட் செய்து கொடுக்கிறதா சுகா அண்ணாட்ட சொன்ன ஹோம்... அவரே நடத்துற ஆர்ஃபனேஜ்... அவருக்கு இவனுங்க தில்லாலங்கடி புரிஞ்சு பிடிச்சு  மிரட்டின மிரட்டலில் வாலை சுருட்டிட்டு கிடக்காங்க...ஆனாலும் சுகா அண்ணா அவங்கள மாட்டிவிடல பார்த்தியா...இல்லனா மேனேஜ்மென்ட்...டி.சி குடுத்துருக்கும்...

அண்ணா எப்பவும் ரியல் ஹீரோ தெரியுமா...?

ஏய் சார் வரார்...” அவர்கள் பேச்சை முடித்துக் கொள்ளவும் இவளிருந்த அறைக்குள் அவன் நுழையவும் சரியாக இருந்தது.

“இ..” அவன் எதைச் சொல்ல தொடங்கினான் என மறக்க வைத்தது மகிழினி தந்த சத்தமற்ற முதல் முத்தம் அதன் துணையான மெல்லணைப்பு.

சில நொடிகளில் மெல்ல விலகியவளை பார்த்துச்சொன்னான்  “வீட்டுக்கு வா கவனிச்சுகிடுறேன்....”

மீண்டுமாய் இறுக்கி அணைத்தாள் அவனை. “ ஹேய்...இது காலேஜிடி ஆனந்தி...இவ்ளவுநாள் அடக்கி வாசிச்சு சம்பாதிச்ச பேரை தாரை வார்த்துடாத..”

மெல்ல விலகி அவனைப் பார்த்தாள்.

“மகிழினி...ஆனந்தி ஒரே அர்த்தம் தானே....அப்படி கூப்பிடலான்ந்தானே..”

ன்று இரவு அவர்களது அறை.

“வெயிட் செய்யடி ஆனந்தி..” என்றவன் “ஒரு நிமிஷம்...இது அங்க இல்லாமதான் நேத்தே பதில் சொல்லலை.” என்றுவிட்டு அருகிலிருந்த அலமாரியைத் திறந்தான்.

“ஆனந்தி...”இவளது அபிமான கவிஞர் ஆனந்தனின் கற்பனைக் காதலி.

இவள் பொழுதுகிடைக்கும் போதெல்லாம் படிக்கும் கவிதைகள் அவருக்குத்தான் சொந்தம். காவ்யாவிடம் ஆனந்தனின் ஆனந்தியைப் பத்தி இவள் சிலாகித்த  போது அவன் முறைத்ததாக நியாபகம். ஆனால் இன்று இவனுக்கு இவள் ஆனந்தியாம்...

அவரின் புத்தகங்களோடு வந்து நின்றான்.

அருகில் அமர்ந்து வாசித்தான்.

செய்ய முடிந்ததெல்லாம் செய்துவிட்டேன்

உன் முகம் பார்க்க மறுத்துவிட்டேன்

உன் மூச்சுபடா இடத்தில் ஒளிந்து கொண்டேன்

ஆனாலும்

தொலைய மறுக்கிறதே இத்துணிகர காதல்.

செய்வது திருட்டல்ல

கொண்டிருப்பது உயிர்காதல்

அடங்க மறுக்கும்

ஆண்மனம்

ஆனந்தமாய் அழுகிறதே

ஆனந்தி அடி ஆனந்தி அறிவாயோ நீ.

இது உன்னை முதல் தடவை நம்ம யுனிவர்சிட்டியில் நடந்த செமினார்ல பார்த்துட்டு எழுதினது.

யாருன்னே தெரியாத பொண்ணு பின்னால போன மனதை அடக்க முயற்சி செய்து முடியாம தவிச்சப்ப எழுதினது.

அதிர்ந்து போனாள் என்பது மிகவும் குறைத்துச் சொல்லப்பட்ட வெளிப்பாடு.

அப்படியானால் உண்மையிலேயே இவள்தான் ஆனந்தியேவா?

இந்த ஆனந்தன் எனக்காக வந்தால் எப்படி இருக்கும் என  ‘என்னவளே ஆனந்தி’ கவிதை தொகுப்பை  படித்தபோது காவ்யா கேட்டிருக்கிறாள்.

“பேராசை எல்லாம் நமக்கு கிடையாதப்பா...இந்த கவிதையை என் கூட உட்கார்ந்து படிக்கிற மாதிரி ஒருத்தன் வந்தா போதும்..”.இவள் சொன்ன பதில் இப்பொழுது மனதில் நிழலாடியது.

கண்கரித்தது.

கல்லூரி காலத்தில் அவனது முதல் தொகுப்பை படித்தபோது இந்த ஆனந்தனே தனக்கு வேண்டும் என இவள் ஆசைப் பட்டது உண்டுதான். அதற்காக ஜெபம் கூட செய்திருக்கிறாள். பின் நாட்களில் கற்பனை வாழ்வாகாது என தன்னை தானே கடிந்தும் கொண்டிருக்கிறாள். மறந்து போன ஜெபங்களை நிகழ்த்தி தரும் என் தெய்வம் யேசப்பா..!!!

. புத்திசாலி போதிக்க தகுந்தவன்

பதக்கமிட்டு பாராட்டியது

படிக்கும்பள்ளி அறை

படுக்கும் பள்ளி அறையோ

எள்ளி நகை ஆடியது.

நிம்மதி விதைத்து

தவிப்பை அறுக்கும்

காதல் பித்தன்

துயில் விற்று மையல் வாங்கும்

மதியீனன்

காலங்களை கொடுத்து

கானல் பயிர் செய்யும்

காதலன்

பட்டம் தந்தவர்கள்

பார்க்க தவறிவிட்டார்கள்

உன் பைத்தியகாரத்தனம்.

நீ காதல் பாலைவனம்!

சோகம் சொன்னேனென்று துடித்துவிடாதே சுகவர்த்தினி

ஆழ்ந்தெடுக்கும் என் அனைத்து மூச்சிலும் ஆனந்தி

ஆக அழுகை வலி அறிய வழியில்லை அறிவாய் நீ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.