(Reading time: 21 - 41 minutes)

 

து நான் பி.எச். டி வாங்கினப்ப எழுதியது..”.

தொலைந்தாற் போன்ற நிலவு

நித்திரை கொண்ட உன் முகம்.

துயில் தொலைத்த என் மனம்

திறந்தாற் போன்ற வானம்.

திருடிய நித்திரையை

திருப்பித் தந்துவிடு

இல்லையெனில் திருமண இரவுகளில்

தூங்கப் போகிறேன் நான்

காரணம் நீயடி ஆனந்தி

இது ஒரு நாள் லெஷர் பீரியடில் நீ தூங்கியதை பார்த்துட்டு எழுதினது...

கண் முன் விரியும் என் வானம் நீ

மையிட்ட உன் கண்கள் என் இரவு பகல்

உன் புன்னகை என் புலர் பொழுது

மலர் இதழ்கள் என் இருப்பிடம்

இரவில் பிரிவில் இறக்கிறேன் நான்

தினம் பொழுது

உன் இதழில் என் பெயர் வரும் பொழுது

உயிர்க்கிறேன் மறுபடியும்

என்னைக் கொல்வதும் கொள்வதும்

உன் சுய தொழில்

நான் மரிப்பதும் உயிர்ப்பதும்

காதல் செயல்

சுகம் விதைத்து சோகம் அறுத்தாலும்

என் காதல் நிரந்தரம்.

உனக்கு சுகம் சேர்க்காமல்

முடியாது என் ஜீவனம்.

“என்னோட புக்ஸைப் பத்தி நீ பேசுவதை கேட்டுட்டு எழுதியது....”

அவன் சொல்ல சொல்ல அழுதபடி அவன் மடி சாய்ந்தாள் மனைவியாகிவிட்ட ஆனந்தி.

இந்த மகிழினி யார் என்று தெரியவில்லையா? கதை படிக்கின்ற நீங்கள் தான். அந்த சுகவர்த்தன் உதித்துவரும் புத்தாண்டுதான்.

இதுவரை நீங்கள் கண்ட காட்சி, கனவு, சோதனை, துன்பம், இழப்பு, நம்பிக்கையின்மை எதுவானாலும், இந்த 2015 சுகம் தரும் சுகவர்த்தன ஆண்டாக அமைந்து நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்பதற்கும் மேலாக உங்களுக்கு பொழியட்டும் ஆனந்த சுகமழை. ஒன்றன் பின் ஒன்றாக தொடரட்டும் இன்ப நிகழ்வுகள்.

There Shall Be Showers of Blessings

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.