(Reading time: 34 - 68 minutes)

க்கத்தில் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் திவ்யா. ஆர்யாவின் தீவிர ரசிகை.

“உனக்கு அழுகை வரலியாடா?”

“தூக்கம் வேணா  வருது”

“சீ போ..உனக்கெல்லாம் ஃபீலிங்க்ஸே கிடையாது.” . என் கையை இறுகப் பற்றிக் கொண்டு படத்தை தொடர்ந்தாள்.

நானும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, ஆர்யாவின் ஃப்ளாஸ்பேக்கில் பயணித்தேன்.

ஒருவழியாக இடைவேளை வந்துவிட்டது.

உட்க்கார்ந்திருந்த கூட்டம் மெதுவாக நகரத் தொடங்கியது. பெரும்பாலான் பெண்களின் முகத்தில் கண்ணீர்த் தடத்தைக் காண முடிந்தது. ஒரு வேளை நமக்குத் தான் ஃபீலிங்க்ஸ் இல்லயோ? ..

“என்ன சாப்பிடுற?’’

“ஐஸ் க்ரீம் அப்புறம் காஃபி”

“என்ன காம்பினேஸண்டி இது?”

“டேய்..காஃபி உனக்குடா..நீ அதானே வாங்குவ?”

“ரைட்”..

என்னைப் பற்றி என்னை விட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் இவளுக்கு இது ஒன்றும் பெரிதில்லை.

கேன்டீன் நோக்கி செல்லத் தொடங்கினேன். அவளும் பின் தொடர்ந்தாள்.

ஒரு காஃபிக்கும் ஒரு ஐஸ்க்ரீமுக்கும் எண்பது ரூபாயைக் கொடுத்து விட்டு வாங்கிகொண்டேன்.

“வேற எதுவும் வேணாமா?”

“நோ.. “ ஐஸ்க்ரீமை நுனிநாக்கால் தடவிக் கொண்டே பதிலலித்தாள்.

“சரி..இதப் பிடி. ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்”

காஃபியை அவள் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

எதிர்பார்த்ததைவிடவும் சுத்தமாக இருந்தது.

போன வேலையை நல்ல படியாக முடித்து விட்டு, அங்கிருந்த ஃபுல் சைஸ் கண்ணாடியில் பார்த்து ஒரு முறை தலைவாரிக்கொண்டேன்.

ஹேண்ட் ட்ரையரின் அடியில் கை நீட்ட, சூடான காற்று ஈரத்தை போக்கியது.

அங்கே சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் சிகரெட்டின் தீமைகளை கொடூராமாகக் காட்டிகொண்டிருக்க,அதன் கீழே சிலர் அசால்டாக தம் அடித்துக் கொண்டிருந்தனர். இத்தனை பயமுறுத்தல்களையும் மீறி இவ்வளவு பேர் பிடிக்கிறார்களே, அதிலென்ன தான் இருக்குமோ? ஒரு நாள் பிடித்துப் பார்க்க வேண்டும் என உறுதியெடுத்துக்கொண்டேன்.

இடைவேளை முடியம் நேரமாகிவிட்டது. காஃபியும் ஆறிப் போயிருக்கும்.ஓட்டமும் நடையுமாக கேன்டீனை அடைந்தேன்.

போகிற வழியில் ஒரு இளம்பெண் என்னையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே செல்ல மனதில் ஒரு குட்டி சந்தோஷம் பிற்ந்தது. அவள் கண்கள் என்னிடம் ஏதோ சொல்லத் தவித்தன.

அந்நேரத்திற்குள் திவ்யா பாதி ஐஸ்க்ரீமை சாப்பிட்டிருந்தாள்.

“உள்ள போலாமா?”

“ம்ம்..இதப் பிடி”

காஃபியை வாங்கிகொண்டேன்.

“அங்க பார்...அந்தப் பொண்ணு என்னையே திரும்பத் திரும்பப் பாத்துட்டிருக்கா..அவ என்னமோ சொல்லனும்னு நினைக்கிறா..இன்னிக்கு அவ்ளோ ஹேன்ட்ஸ்ம்மாவா இருக்கேன்?”

“அது ஏன்னு எனக்கு தெரியும்”

“ஏன்? சொல்லு சொல்லு “

“உள்ள வா சொல்றேன்”

“ஏன்? இங்கயே சொல்லேன்”

“நோ..உள்ள வா”

அவளைப் பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தேன். மீண்டும் உள்ளரங்கின் இருள் கண்களை பற்றிக்கொண்டது.

“இப்போ சொல்லுடி”

மெதுவாக நெருங்கி வந்து காதில் முனுமுனுத்தாள்.

“ஜிப் போடுடா எருமமாடு”..

“வாட்???”..அதிர்ந்து போய் குனிந்து பார்க்க... ஆமாம்..வரும் அவசரத்தில் மறந்துவிட்டேன் போல.

“ஷிட்..மறந்துட்டேனா!” .. நல்லவேளை இருட்டாக இருந்தது. யாரும் என்னை கவனிக்கவில்லை. 

எங்கள் சீட்டின் வரிசையில் நுழைந்தோம்.

“இதோட பல தடவை நானே உனக்கு சொல்லிருக்கேன். ஒரு நாள் க்ளாஸ்ல மானம் போகப் போகுது பாரு..அப்பிடி என்னடா மறதி உனக்கு?” என்று கேட்டு நக்கலாக சிரித்தாள்.

“ஆமா..பசங்களுக்கு நூறு வேலை,ஆயிரம் கவலை. அதுல இந்த மாதிரி சின்ன விஷயமெல்லம் மறந்ததிடுறோம். உங்களுக்கும் இருந்தா தெரியும்”, எனக்குள்ளேயே முனுமுனுத்துக்கொண்டேன்.  சிரிப்பு  வந்தது.

எங்கள் ஷ்பெஷலிட்டி இது தான். நாங்கள் எங்களின் ஆண் பெண் வேறுபாட்டை என்றுமே உணர்ந்ததே இல்லை.. எந்த இடைவெளியும் எங்களுக்குள் இல்லை. எதையும் சொல்லத் தயங்கியதில்லை. நானும் சரி அவளும் சரி. எத்தனயோ முறை நானும் அவளின் ட்ரெஸ் டைட்டா இருக்கு ,ரொம்ப ட்ரேன்ஸ்பரென்ட்டா இருக்கு என திட்டியிருக்கிறேன். “நீ ஃப்ரெண்டா இல்ல அப்பாவா?” என அவள் கேட்பாள்.

 படம் தொடர்ந்தது. மீண்டும் என் கையைப் பற்றிக்கொண்டாள். ஆறிப் போன காஃபியை சுவைக்கத் தொடங்கினேன்.

செல்ஃபோன் திரையில் நேரத்தைப் பார்த்தேன்.

ஐந்தரை மணி. ஆர்யாவும் நயன்தாராவும் ஏர்போர்ட்டில் சென்டிமென்டைப் பொழிந்து கொண்டிருந்தார்கள்.

ஆர்ம்ரெஸ்ட்டில் நான் வைத்திருந்த காஃபி கப்பை போட டஸ்ட்பின் இருக்கிறதா என அந்த மங்கலான வெளிச்சத்தில் சுற்றும் முற்றும் தேடினேன். எங்கேயும்இல்லை.

அப்போது தான் முன் வரிசையின் ஒரு கார்னரில் இருந்த ஒரு ஜோடி கண்ணில் பட்டது. யாரும் கவனிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் கொஞ்சம் ஓவராகவே க்ளோசாக இருந்தார்கள். அவ்வப்போது முத்தங்கள் வேறு.

பார்க்க வேண்டாமென எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் பார்வை அங்கேயே நிலைகொண்டு நகர மறுத்தது. சரி,,பார்த்துத் தான் தொலைவோமே என உற்று நோக்கினேன்.

திரையில் எதோ ஒரு காட்சி மாறும் போது கொஞ்சம் அதிக வெளிச்சம் அடிக்க, அந்த ஒளியில் அந்த ஜோடியை நன்றாகக் காண முடிந்தது.

அந்தப் பெண் ஏதேச்சையாக எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பினாள்.

அவள் முகத்தைப் பார்த்ததும் ஒரு நொடி என் மூச்சே நின்றது.

அனிதா தான் அது. எங்கள் க்ளாஸ்மேட். ப்ரேமின் உயிர்த்தோழி.

அப்போ அந்தப் பையன் யாரென தெரிந்து கொள்ளப் பார்வையைக் கூர்மையாக்கினேன்.

அந்த இருளிலும் அவன் யாரென ஓரளவு தீர்மானிக்க முடிந்தது.

சுருள் முடி. நல்ல நிறம். அதே கண்ணாடி. ப்ரேம் தான்

இவள் பார்த்துவிடக் கூடாது கடவுளே என மனதில் வேண்டிகொண்டே திவ்யாவின் பக்கம் திரும்பினேன்.

என்னுடன் சேர்ந்து அவளும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உலகமே சுற்றாமல் நின்றுவிட்டதைப் போல இருந்தது.

“திவ்யா..”

’சீக்கிரம் வெளிய போலாம்..எழுந்திரு” அவள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காணமுடியவில்லை.

ஏதும் சொல்லாமல் எழுந்தேன். அவள் கையைப் பற்றிக்கொண்டு த்யேட்டரை விட்டு வெளியேறினேன்.

பார்க்கிங்கிலிருந்து கார் வெளியே எடுத்து வர நேரம் பிடித்தது. இப்பொழுது மெய்ன் ரோட்டில் போய் கொண்டிருந்தோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.