(Reading time: 34 - 68 minutes)

ம்ம்ம்"

“என் அண்ணன் ஒரு பொண்ண லவ் பண்றான்.  எங்க வீட்லயும் ஒகே. அந்த பொண்ணு வீட்லயும் ஒகே. சீக்கிரமா கல்யாணம். இதுல ஒரு பெரிய சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். பொண்ணு யாருனு தெரியுமா? "

"சொல்லு"

"நம்ம க்ளாஸ்மேட் அனிதா தான். ஹஹா,,பேஸ்புக் லவ்.. நம்ம க்ரூப் பிச்சர்ல எப்போவோ அவள பாத்திருக்கான். உடனே லவ் ஸ்டார்ட் ஆயிடுச்சு போல. ரொம்ப நாளா சேட்டிங், போன் கால்னு போயிட்டிருந்துது. அப்புறம் டபுள் சைட் லவ் ஆயிடுச்சு.  நீ கூட பாத்திருப்பியே. அவ பரத் டேக்கு ஐபோன் குடுத்தேனே..அது அவனோட கிப்ட் தான். இன்னிக்கு கூட ரெண்டு பேரும் படத்துக்கு கூட போயிட்டு வந்திருக்காங்க. சரி,,நீயே கண்டுபிடிப்பனு வெய்ட் பண்ணினேன். ஆனா நீ ..ம்ம்ம் ஹ்ம்ம்..வேஸ்ட்.. எப்டி? செம ஷாக் ஆயிட்டியா?..ம்ம்ம்?”  என்று சொல்லி உரக்க சிரித்தான்.

அவள் முகத்தைப் பார்த்தேன். அதிர்ச்சியில் வெளிறிப்போயிருந்தது.

“திவ்யா,,எதாவது பேசேன்..” என்றான்.

“ஆ.." இவள் ஏதோ சொல்லத் தொடங்கவும் அதே நொடியில் பேட்டரி ட்ரை ஆகி போன் அணைந்து போகவும் சரியாக இருந்தது.

 ஆழ்ந்த மௌனம்.. . எல்லாம் விளங்கிவிட்டது . ப்ரேமின் அண்ணனை நாங்கள் ப்ரேம் என்று எண்ணி, ,,,என்னெனவோ நடந்து விட்டது. இப்போது எங்கள் இருவரின் விழிகளும் மற்றொருவரின் விழியில் பதிலைத் தேடின.  அவன் காதல் பொய் அல்ல. எங்கள் காதலும் பொய் அல்ல. அவனும் நிஜம்,நானும் நிஜம்.  என்ன செய்யப் போகிறோம்??

என்னை நோக்கி வந்தாள்.  என்னெதிரே வந்து, ஜன்னலில் சாய்ந்து நின்றாள்.  நான் அவளையே நோக்கினேன்.

பட்டென இருவரும் மீண்டும் கட்டித் தழுவிக்கொண்டோம். .

"ஐ லவ் யூ.  இனி யாருக்காகவும்,எதுக்காகவும் நாம பிரிய மாட்டோம். எது சரி எது தப்புனு யோசிக்கக் கூட நான் தயாரில்ல. உண்மை என்ன,இது லாஜிக்கலான முடிவா, புத்திசாலித்தனமான முடிவா,இல்லையா..இது எதுமே எனக்கு முக்கியம் இல்ல.. நீ மட்டும் தான் இப்போ இந்த உலகத்துல எனக்காக இருக்கணு தோணுது,,அப்பா அம்மா ப்ரேம்,யாருமே இல்ல,,யாருமே வேண்டாம்,,நீயும் உன் காதலும் மட்டும் தான் வேணும்..ஐ லவ் யூ டா" என்றாள்.

“ஐ ல யூ டூ" என்று சொல்லி இன்னும் நெருக்கமாய் கட்டிக்கொண்டேன்.

“அப்போ ப்ரேம்?"

“ஸ்விட்ச்டு ஆப்,,பர்மனென்ட்லி "என்று சொல்லி கண்ணடித்தாள் என் தோழி,என் காதலி. 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.