(Reading time: 17 - 33 minutes)

"ன்னப்பா நல்ல தரிசனம் கிடைத்ததா?"

"ம்ம், நல்ல தரிசனம் கிடைச்சுதும்மா!"

"சரி, வா! உன்னை வீட்டில் விட்டு விட்டு, நான் ஆபிசுக்குப் போகணும்?" என்று  அவன் கூறினான்

ஏறிக் கொண்டாள்,

அவன் அம்மாவை வீட்டில் விட்டு விட்டு, “டைம் ஆயிடுதும்மா, நான் இப்படியே கிளம்பறேன்…”

"உள்ளே வாடா, சாப்பிட்டுவிட்டு போ," என்றாள் யசோதா

முரளியின் அப்பா, நந்தகுமார்  டில்லிக்கு பிசினெஸ் வேலையாய் போயிருக்கிறார், இவர்கள்  இருவர்  மட்டும்தான்...

உள்ளே வந்து சாப்பிட உட்கார்ந்தான்,  "சீக்கிரம்மா, டைம் ஆயிடுது"

"இதோ வந்துடேண்டா, எல்லாம் ரெடி!"

அவன் அம்மா சொன்னது காதிலேயே விழவில்லை..

அந்த பெண்ணின் ஞாபகம் அவனை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது...

"என்னடா ! நான் சொன்னேனே என் பிரெண்டோட பெண்ணைப் பார்க்கலாமா?" என்று கேட்டாள் யசோதா

பதில் வராததை பார்த்து, தன் பேச்சை நிறுத்தி விட்டு அவனை நிமிர்ந்து  பார்த்தாள்...அவன் பலத்த யோசனையில் இருப்பது  புரிந்தது..

“முரளி, என்னடா யோசனை?"

"ஒண்ணுமில்லமா!"

"அப்போ, என்னடா சொல்லட்டும்

கோகிலாகிட்ட? "

"சரிம்மா" என்று ஏதோ யோசனையில் சொல்லிவிட்டான் ....

அவன் அம்மாவுக்கு சந்தோஷம் தாளவில்லை, அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தாள், அவன் எழுந்தவுடன் டேபிளை கிளீன் செய்துவிட்டு, அவன் கிளம்பும் வரை காத்திருந்தாள் அவன் சென்றவுடன், தன் புருஷனுக்கு போன் செய்தாள்……

போன் மணி அடித்தது "ஹலோ!"

"ஹலோ! நந்து நான்தான், யசோ

பேசறேன் ,"

"சொல்லும்மா!"

"ஆமா, வெளியூருக்கு போனாதான்

பெண்டாட்டி மேல பாசம் பொங்குது….”

“சரிம்மா, நான் திரும்பி வந்தவுடன் என் பாசத்தை நேரிலேயே கான்பிச்சுட்டா போச்சு... சரி, இப்போ போன் பண்ண விஷயத்த  

சொல்றியாம்மா"

அது வந்து, நம்ம முரளி, கோகிலாவோட பெண்ணை கல்யாணம் பண்ணிக்க சரின்னு சொல்லிட்டான்..."

"சரி, அப்போ... நீ என்ன செய்யப் போற?"

"நான், கோகிலாகிட்ட பேசப்போறேன்,”

“இப்போதைக்கு வெறும் சம்மதம்னு  மட்டும் சொல்றேன், நீங்க வந்ததுக்கப்புறம்

மத்ததெல்லாம் பேசிக்கலாம்,"

"சரிம்மா, உன் இஷ்டம் போலவே செய்….நான் இன்னும் ரெண்டு நாளில் வர பார்க்கிறேன், சரியா கண்ணா, பை"

யசோதா,  அடுத்தது கோகிலாவுக்கு போன் செய்தாள்....

"ஹலோ! கோகி, நான்தான் யசோதா"

"ஹா, சொல்லு யசோதா!"

“"ஹே, கான்க்ராட்ஸ்! நம்ம முரளி கிரீன் சிக்னல் கொடுத்துட்டான், ரொம்ப சந்தோஷமாயிருக்குடி கோகி .."

"அப்படியா, வாவ்! தேங்க்ஸ், யசோதா ! ரொம்ப சந்தோஷமாயிருக்குடி.... சாரி! சாரி! உன்னை இனிமே மரியாதையா   சம்பந்தின்னுதானே கூப்பிடனும்.... ஹஹ.."

"ஏய்! என்ன, என்னையே கிண்டல்  பண்றியா?"

"சீ ...சீ.... நான் கிண்டல்லாம் செய்யல சம்பந்தி.."

"அடி போடி! சரி, சரி, மிச்ச விஷயத்த, நந்து ஊரிலிருந்து வந்தவுடன், நாங்க வந்து பேசறோம், சரி, நான் அப்புறம் பேசறேன் உன்னோட , பை “

“பை”

ராது! உனக்கு நான் சொல்லியிருக்கேனில்லையா, முரளி, என் பிரெண்டோட  பையன்,யசோதா இன்னிக்கு கால் பண்ணா, முரளி ஓகே சொல்லிட்டானாம்,எனக்கு சந்தோஷத்துல கையும் ஓடல, காலும் ஓடல..."

உனக்கும் ஓகே தானே, நீ சொல்லு, நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன், "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.