(Reading time: 17 - 33 minutes)

னசு திக்.... என்றிருந்தது ராதாவுக்கு, மனசு வேதனையில துடித்தது, அம்மாவுடைய சந்தோஷத்தைப் பார்க்கும் போது, தான் வேண்டாமென்று சொன்னால் ரொம்ப வேதனை படுவாளே என்றிருந்தது, தன் வேதனையை மனசுக்குள் புதைத்தாள், அவனுடன் பேசிவிட்டு, யோசிக்கலாம் என்று நினைத்து, வெறும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு...தன் ரூமுக்குப் போய் விட்டாள்,

எப்பவுமே ஆபிசிலிருந்து வந்தவுடன், முகம் கை கால் கழுவி, அம்மா செய்து வைத்த டிபனை சாப்பிட்டு விட்டு, நைட் டின்னெர் ரெடி செய்துவிடுவாள், பிறகு குளித்து விட்டு, சாப்பிட்டு, தன் ரூமில், உட்கார்ந்து, அன்றைய இந்து  பேப்பரையும், கொஞ்சம் விகடன்,குமுதம், என்ற புத்தகங்களையும் படித்து விட்டு பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்கிவிடுவாள், இதுதான் ராதை…..

முரளி தன் வேலை சம்பந்தமாக,ஒரு கம்பனியில் ஆடிட்டிங்காக, பைக்கில் சென்றுக் கொண்டிருந்தான் தனக்கு முன்னால்,  சென்று கொண்டிருக்கும் பைக்கிலிருக்கும் பெண்ணின் துப்பட்டா காற்றில் பறக்கவும், இவன் அந்தப் பெண்ணைப் பார்த்தான்….

அந்தப் பெண் பைக் ஓட்டும் ஆணின் இடுப்பை வளைத்துப் பிடித்து, அவனுடன் ஒட்டிய படி உட்கார்ந்திருந்தாள், அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன்,"இவளா, இருக்கவே முடியாது, இன்றுதான் தன்  காதல் பார்வையால் தன்னை வீழ்த்தியவள், அவளாக இருக்கவே முடியாது," தூரத்திலிருந்து பார்த்ததால் அவளைப் போலவே இருந்திருக்கிறாள், போறாததற்கு அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறான், அதனால் தான் என்று நினைத்து, மறுபடியும் பார்த்தான், பிறகு கொஞ்சம் பைக்கை வேகம் கொடுத்து, அருகில் சென்று பார்த்தான், அந்த நேரம் அவளும் இவன் தங்களை இடிப்பது போல் வேகமாக வருகிறானே என்று பார்த்தாள்….

காலையில் பார்த்த அதே பார்வை, ஆனால் தன்னை தெரியாதது போல் இருந்த அந்தப் பார்வையை பார்த்தவுடன், அவளைப் பார்த்து அருவருத்தான்...

என்ன பெண் இவள்,ஒருவனுக்கு காதல் வலை வீசிவிட்டு மத்தியானமே ஒருவனுடன் இப்படி, கட்டிக்கொண்டு, சீ... சீ... இவளிடம் மயங்கினேனே! என்று தன்னையே திட்டிக் கொண்டிருந்தான்,

அவனுக்கு கோபம், தான் இஷ்டப் பட்ட பெண் எவனுடனோ சென்றுக்கொடிருக்கிறாள் என்ற சுய பச்சாதாபம் என்று எல்லாம் கோபமாக வெடித்தது ...

அவன் சென்ற ஆபிசில் எல்லோரையும் கடிந்து வாட்டி எடுத்தான், இந்த வாவ்சேர் எங்கே, அந்த பைல் எங்கே என்று, கடைசியில் தான் செய்வது அபத்தம் என்று அவனுக்கே அவமானமாக இருந்தது, எல்லோருக்கும் அவனே ஹோட்டலிலிருந்து, நல்ல சாப்பாடு ஆர்டர் செய்துவிட்டு "நாளைக்கு பார்க்கலாம்" என்று கிளம்பிவிட்டான்

வன் நேரே தன் வீட்டுக்கு போனான், அவன் அம்மா "என்னடா! ஏதோ வேலை இருக்கு அப்படின்னே, திரும்பி வந்துட்டே, அப்போ அதெல்லாம் சும்மாவா," என்று கேட்க, அவளிடம் எரிந்து விழுந்தான்,

"எனக்கு ஒரே தலை வலி, நான் போய் தூங்கப் போகிறேன், என்னை டிஸ்டர்ப் பண்ணாதே," என்று சொல்லிவிட்டு, தன் ரூமுக்குப் போய் படுக்கையில் விழுந்தான்,

அவனை தூங்க விடாமல் மறுபடியும் அவள் முகம், "என்னை ஏண்டி இப்படி என்னை கொல்லறே, " என்று வேதனையில் தூங்க முடியாமல் அவளை மறக்க தவித்தான்... கீழே இறங்கிப் போய், "அம்மா காபிம்மா, ஒரே தலை வலி," என்றான்

"இதோ ஒரே நிமிஷம் இந்தா, அப்பாவுக்காக கொஞ்சம் பஜ்ஜி போட்டேன், இதோ இதை சாப்பிடு, காபி கொண்டுவரேன்" என்றாள் அவன் தாய் யசோதா

பஜ்ஜியையும், காபியையும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்த ஒரு புக்கை புரட்டிக் கொண்டிருந்தான், "வர ஞாயிறு நிச்சயதார்த்தம் உனக்கும், கோகிலா பெண்ணுக்கும்...கடைக்கு போய் புடவை எடுக்கணும், நீயும் வரியா?" என்று அவன் அம்மா கேட்க,

"ஏம்மா, ஏற்கனவே தலை வலிங்கிறேன், நீ இங்க வரியா, அங்க வரியான்ற "

"சரிடா, நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ, எல்லாம் நான் பார்த்துக்கிறேன்"

அவன் எழுந்து தன் ரூமுக்குப் போனான், நல்லகாலம் அம்மாவிடம் அந்தப் பெண்ணைப் பற்றி எதுவும் உளறாமல் இருந்தேன்," எனக்குதான் நான் நினைத்தப் பெண் கிடைக்கவில்லை, அம்மாவாவது சந்தோஷமாக இருக்கட்டும், அவ சந்தோஷத்தை கெடுப்பானேன்,

ஆனால் எவ்வளவு அம்மா சொல்லியும் அந்த கோகியோட பெண்ணை பார்க்க வேண்டுமென்று தோன்றவில்லை... மனசெல்லாம் இந்தப் பெண்ணின் மீதே இருக்கிறது, கல்யானத்துக்குள்ளே, தன் மனசை சரியாக்கிக் கொள்ளவேண்டும்...

தூங்கி எழுந்து வந்து டேபிளில் உட்கார்ந்தான், அவன் அப்பா நந்தகுமார், அவனருகில் வந்து உட்கார்ந்தார், "என்னப்பா, இன்னிக்கு வேலை நிறையவா,தலைவலியாம்,ஏண்டா, இன்னொரு பார்ட்னரை வைத்துக்கொள் ,என்று எத்தனை முறை கூறி இருக்கிறேன்,ஏன் யாருக்காக கஷ்டப்படுகிறாய்?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா, ஏதோ இன்னிக்கு தலைவலி, அதுக்காக மனுஷனுக்கு ஒன்னும் வராம இருக்குமா என்ன!"

"என்ன நந்து.. அவன் தான் கிடைத்தானா உங்களுக்கு, அதான் கார்த்தாலேந்து என்னை அருத்துண்டிருகீங்களே, அவனையும் இந்த வம்பில் இழுக்கிறீங்க, "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.