(Reading time: 17 - 33 minutes)

"த பாருடா, வீட்லயே இருக்கமாட்டேங்கிறியேன்னு சண்டை போடுறியே, பாவம் என் செல்லத்தோட  கொஞ்சம் இருக்கலாம் என்று பார்த்தால், என் காலையே வாரறியா, இப்போ வரையில் பையன் மட்டும்தான், இனிமே உனக்கு ஒரு துணை வேறு கிடைக்கப் போறது, ம்.. தேவுடா.. என்னைக் காப்பாத்து "

யசோதா சிரித்துக் கொண்டே, "சரி...சரி... ரொம்ப வேஷமெல்லாம் போடாதீங்கோ நந்து!"

"எல்லா பர்சேசும் முடிஞ்சுடுத்துடா, புடவையை பாரேன், இன்னிக்கு பெண்ணைப் பார்க்க போகலாமா, வரியா?"

"இல்லம்மா, அப்புறம் இன்னொரு நாள் போகலாம், புடவையெல்லாம் நீ பார்த்துக்கோ, எனக்கு என்ன தெரியும்,"

"தெரிசுக்கோடா, இல்லேன்னா ,உன் வாழ்க்கைல நிம்மதியே இருக்காது....." என்று நந்தகுமார்,யசோதாவை  பார்த்துக் கொண்டே வம்பிழுத்தார்,

"ஆமாம்பா, அப்பா சொல்வது ரொம்ப சரி, இதெல்லாம் தெரிஞ்சுக்கணும், அப்பத்தான் வாழ்க்கை ரொம்ப ஈசியா போகும் .." என்று கூறிக் கொண்டே, நிச்சயத்துக்கு வாங்கிய புடவை, அதற்கு மாச்சாக நகைகள், என்று அசத்தியிருந்தார் யசோதா,

அந்த புடவை, தான பார்த்த பெண் கட்டினால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தான்,"ச்சே, என்ன இது, எந்தப் பெண்ணை நினைக்கக் கூடாது என்று நினைத்திருந்தானோ அவளையே நினைத்துக்கொண்டு..”

"எப்படிடா இருக்கு?" என்று கேட்ட  அம்மாவின் குரலில் கலைந்து, உன் செலக்ஷனுக்கு என்னம்மா, கலக்கிட்ட...”என்று அம்மாவைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்

"யஷ், இப்பவே அனுபவி, கல்யாணத்துக்கு அப்புறம், ஒன்லி பெண்டாட்டி, அப்புறம் இந்த பிரிவிலேஜ் எல்லாம் அவளுக்குத்தான்," அவன் முகம் சிவந்தான்,

"என்ன நந்து, என் முரளி, எப்பவும், என்னுடையவன் தான், "

"வெல் செட் அம்மா, என்னவோ ரொம்பத்தான், அப்பாக்குத்தான்  பொறாமையா இருக்குன்னு நினைக்கிறேன்,"

"ஹேய்! ஆமாண்டா, ஒரு வாரம் கழிச்சு என் பொண்டாட்டியை பார்க்கிறேன் நான்,"

"ஐயோ போரும் நிறுத்துங்கோ நந்து, பையன் கிட்ட பேசற பேச்சா இது,"

"ஹஹ!" என்று வில்லன் சிரிப்பு சிரித்துக் கொண்டு தன் ரூமுக்குப் போனான், கண்ணிலிருந்து கண்ணீர் எட்டிப் பார்க்கவா என்று இருந்தது , தன் அம்மா, அப்பாவை நினைத்து பெருமையாக இருந்தது ....

வள் அடுத்த  நாள், கோவிலுக்கு போனாள்... ஆனால், வெகு நேரம் காத்திருந்தும் அவன் வரவேயில்லை, கண்ணில் நீர், அதோடு தன் ஸ்கூட்டியை  எடுத்த கொண்டு,ஆபிஸ் போனாள், அடுத்து, அடுத்து நாளும் அவன் வராததால், வேறு  வழி இல்லாமல்,தன் முதல் காதல், முடிவே இல்லாமல் முடுந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு, அம்மா சொன்ன பையனையே கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவு செய்தாள்….

வனுக்கு உடனடியாக மும்பை போக வேண்டிய வேலை இருந்தது,

அவன், தன் பெட்டியை எடுத்து கொஞ்சம் தன் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான், "என்னப்பா எங்கேயாவது போறியா என்ன,"

"ஆமாம்மா, அர்ஜண்டா மும்பை போகணும், அதான் எல்லாம் ரெடி பண்ணிட்டிருக்கேன்,ஒரு ஐந்து நாள்ல வந்துடுவேன்,"

"என்னடா! நிச்சயதார்த்தத்துக்கு, நீ இல்லாமையா, என்னடா இது, நிச்சயத்துக்கு வரவங்க எல்லாம் உன்னை பற்றி கேட்பார்கள் , நான் என்னடா பதில் சொல்றது!"

"சாரிம்மா, கல்யாணம்தான் நான் இல்லாம நடக்காது, நிச்சயம் நீங்களே நடத்திடுங்க, இது ஒரு இம்பார்டன்ட் மீட்டிங், கண்டிப்பாக, போயாகனும்.."

அவன் அம்மாவை தன் புறம் திருப்பி, "என்னை பாரும்மா, வருத்தப் படாதே, ஐ அம் சாரி, ப்ளீஸ் கண் கலங்காத, கல்யாணம் இன்னும் ஒரு வாரத்துல இல்லையா, அதனாலே நான் வந்துடுவேன், இந்த மீட்டிங் ரொம்ப இம்பார்டன்ட் புரிஞ்சிப்பல்ல, சமர்த்தா,இப்ப என்னை வழி அனுப்பி வை,"

"சரி போய்ட்டுவா, கோகிக்கு, என்ன சொல்லப் போறேன்னே தெரியல, அவ ஏற்கனவே கேட்டா, முரளிக்கு இந்த கல்யாணத்தில் உண்மையாவே இஷ்டமா, என்று, சரி பார்க்கலாம்"

கிளம்பிவிட்டான், இன்னும் இரண்டு மணிநேரத்தில் ப்ளேன், வாசலில் காப் வந்தது ஏறி கொண்டு போய்விட்டான், வீட்டில் யாருமில்லை.... யசோத மட்டும்தான், சமையல் முடிந்ததும், விடிந்தால் நிச்சயதார்த்தம், அதற்கு எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.....

நந்தகுமார் வந்தவுடன் சாப்பிட்டு,எல்லாம் எடுத்து வைத்துவிட்டு வந்தாள் யசோதா!

"என்னடா, ஏதோ யோசனையில் இருக்கே, உன் நந்துவை சரியாவே கவனிக்கல?"

“இல்ல நந்து,ஐ'ம் ஓர்ரீட்....நம்ம முரளிக்கு, ஒரு வேளை…. அவன் வேறு  ஏதாவது  பெண்ணை லவ் பன்றானொன்னு தோணுது,நந்து!"

"ஏம்மா! அப்படியா நினைக்கிற?"

ஆமாம்பா, அவன் இந்த கல்யாணத்தில்  இண்டெரெச்டெட்டா இல்ல...

கல்யாணம்னா, எல்லா பசங்களுக்கும் எவ்வளவு கனவுகளும், கற்பனையும் இருக்கும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.