(Reading time: 17 - 33 minutes)

னால், இவனோ, பெண்ணை பார்க்ககூட இல்லை .. அதுதான் எனக்கு வருத்தமா இருக்கு”

"அவனுக்கு  இப்போ ஆடிட்டிங் டைம்...நீதான் புரிஞ்சுக்கணும்,அவனுக்கு, கனவுகளுக்கும், கற்பனைக்களுக்கும் நேரம் இல்லைம்மா, அத நீதான்  புரிஞ்சுக்கணும் ..."

“சரிங்க, நான் புரிஞ்சுப்பேன், அத கோகிலா வீட்டுக்காரங்க புரிஞ்சுக்கனுமே!

இந்த மாதிரி பான்க்ஷனில் தான் ,எல்லோரும் தலா,தலா பேசி எல்லோர் மனசையும் கலைத்துவிடுவார்கள்.. அதான் பயமா இருக்கு.. “

"சரிம்மா நாம பார்த்துப்போம்,

கவலைப்படாதம்மா, எல்லாம்  சரியாகிடும், கவலைப்படாதே.. தூங்கு வா!!"

கஷ்டப்பட்டு, வெகு நேரத்திற்குப் பிறகு தூங்கினாள்..

பொழுது விடிந்ததும் செய்ய வேண்டிய வேலையெல்லாம் செய்துவிட்டு, எடுத்துக் கொண்டு போக வேண்டியதெல்லாம், எடுத்த வைத்துவிட்டு, போய் கிளம்பினாள்…

பெண் வீட்டிற்கு சென்று இறங்கியவுடன் க்ரண்ட் வெல்கம் ...கோகி, மிகவும் சந்தோஷத்துடன் அவர்களை கவனித்துக் கொண்டாள். ..முரளி வர முடியாத நிலைமையை எடுத்துச் சொன்னாள் யசோதா. . அப்போது முரளியிடமிருந்து போன் வந்தது…

"அடய் முரளி! சொல்லுப்பா, எப்படிப்பா இருக்கே?"

"அம்மா,நீ எப்படி இருக்கே?சாரி, என்னால வரமுடியாம போயிடுத்து, சரி அந்தப் பெண்ணிடம் போனை கொடும்மா,நான் பேசறேன் "

அவள் சிரித்துக் கொண்டே தனக்கு வர போகும் மருமகளிடம்  கொண்டு போனை கொடுத்தாள்...

"யார் ஆண்டி?"

"பேசு, பேசி பார்!" என்று சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு சென்றாள்...

"ஹலோ! நான் முரளி, சாரி! நான் மும்பைல இருக்கேன்,அதனால நிச்சயத்துக்கு வர முடியல, ப்ளீஸ் டோன்'ட் மிஸ்டேக் மி..இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்னு அம்மா சொன்னாங்க, அதனால ஐ வில் மீட் யு தென் ....."

"ஓகே !"

"பை!"

"பை!"

போனை இருவரும் ஆப் செய்தனர்..

முரளி ஒரு பெரு மூச்சு விட்டான். ...பாவம் அந்தப் பெண், என் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தால்,என்னை பார்க்காமலேயே கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லியிருக்கா...

ரண்டு நாள் கழித்து, சென்னை வந்தான், அவன் அம்மா, "உனக்கு, முக்கியமா யாரையாவது கல்யாணத்துக்கு கூப்பிடணும்னா கூப்பிடு....கல்யாணம் ரொம்ப சிம்ப்ளா செய்யலாம், பிரசி ஒரு ரிசெப்ஷன் வச்சிடலாம் என்ன சொல்ற"

"நீ என்ன டிசைட் பண்ணாலும் பரவாயில்லைம்மா, எனக்கு அப்படி யாருமில்லைம்மா,"

கல்யாண ஏற்பாடுகள் விறு .. விறுவென்று நடந்துக் கொண்டிருந்தது ....

ஆயிற்று...... அந்த நாளும் வந்துவிட்டது!!

கல்யாணம் கோவிலில் என்று முடிவு செய்யப் பட்டிருந்தது .....

எல்லோரும் கோவிலுக்கு கிளம்பினர்,வீட்டில் நிறைய விருந்தினர், எல்லோரும் வேனில் கிளம்பினார்கள், முரளியும்,அவன் அம்மா, அப்பா மட்டும் அவர்கள் இன்னோவா காரிலேயே போனார்கள்.

கோவிலில் வந்து இறங்கியவுடன் ஆர்த்தி எடுத்து அவனை வரவேற்றனர்...

அடுத்தடுத்து நடக்க வேண்டியதெல்லாம், நடந்து  கொண்டிருந்தது...  

கல்யாண பெண்ணை வர சொன்னார் ஐயர், "  பெண்ணும்  வந்து மன வரையில் உட்கார்ந்தாள், ஆனால், என்ன   காரணத்தினாலோ, அவன் அவளை திரும்பிப் பார்க்கவில்லை…

தாலிகட்டும் தருணம் எல்லோரிடமும் ஆசி வாங்கி ஐயர் "தாலியைக் கட்டுங்கோ" என்று சொன்னவுடன், தாலியைக் வாங்கி கட்டும்  போது, அவளுடைய முகத்தைப் பார்த்து திடுக்கிட்டான், அவளுக்கும் அதே  நிலைமை,  ஆனால்  அவளுக்கோ சந்தோஷ அதிர்ச்சி... ஆனால் அவனுக்கோ ??

அப்போது கோகிலா"இந்த கோதை எங்கே கண்ணிலேயே படவில்லை, எங்கே பாருங்கோ" என்று யாரையோ அனுப்பி வைத்தாள். .

அவன், உள்ளே ஒரு எரிமலையே வெடித்துக் கொண்டிருந்தது....

அவள் அவ்வபோது அவனை நிமிர்ந்து பார்த்தாள், ஆனால், அவன் முகம்,கோவத்தில் சிவந்திருந்தது...என்ன ஆயிற்று இவருக்கு ஏன் கோவம்?

அப்போதான் அங்கே வந்த கோதையைப் பார்த்தான், இருவரும் ஒரே நேரத்தில்  "நீயா!" என்றனர், இத்தனை நேரம் அவர்களும் ஒருவரை ஒருவரை பார்த்துக் கொள்ளவில்லை,

"நீங்கள் இருவரும்,??"

அங்கிருந்த கோகிலாதான் "அவர்கள்  இருவரும்   இரட்டைப் பிறவிகள், ஒரே மாதிரி இருப்பார்கள்..." தன் மனைவி  ராதையிடம் திரும்பி,

"அப்போ, நான்  கோவிலில் பார்த்தது?, கோதையைப் பார்த்து பைக்ல பார்தது?”

அவன் குழப்பத்தில் இருவரிடமும் வினவினான் ...

எல்லோரும், திகைத்துப் பார்த்தனர், ராதையும், கோதையும் உட்பட, எல்லோரும் குழப்பத்திலும் இருந்தனர், அப்போதான் ராதைக்கு ஏதோ புரிந்திருக்கிறது, நீங்கள் என்னைத்தான் கோவிலில் பார்த்தீர்கள் " என்று வெட்கத்துடன் கூறினாள்

"ஹப்பா... "என்று பெருமூச்சு விட்டு தன் காதல் மனைவியை கண் இமைக்காமல் பார்த்தான்....அவளும்தான்....

முதல் வருட கல்யாணம் நாளில் ராதை ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்று அவனிடம்  கொடுத்தாள், குழந்தையின் மேல் டவலில்  "இது  என் முதல் காதல்(னுக்கு)க்கு சமர்ப்பணம் , அவள்  தன் மகனுக்கு 'சமர்ப்பண்'என்று பெயர் சூட்டினாள்…

அதை பார்த்த முரளி தன் ராதையை உச்சி முகர்ந்தான்...அவர்களை இதே காதலுடன்வாழ வாழ்த்துவோம்...

This is entry #17 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.