(Reading time: 10 - 20 minutes)

வள் சொல்றபடி கேட்டால் அது படமாகவா இருக்கும். படத்தின் இயக்குனர் சொல்வதை நடிக்கிறார்கள். அப்படி செய்தால்தான் படத்தில் விறுவிறுப்பு கூடும். இவள் சொல்வது மாதிரி ஒளிந்துகொண்டால் என்ன நடக்கும்? படம் உப்புசப்பில்லாமல் சென்று ஊத்திக்கொள்ளும்.

அவள் நிம்மதிக்கு ஆயுசு குறைவு என்பது போல் அடுத்த ஒரு வண்டிக்காரன் வந்துவிட்டான். முகமும் தெரியாமல் எத்தனை பேர் வருகிறார்கள் என்றும் தெரியாமல் அவள் தவித்துப்போனாள்.

மீண்டும் அவள் இதயம் திடுக் திடுக் என்று துடிக்க ஆரம்பித்தது.

‘பேசாமல் கைப்பையில் இருக்கும்சிறு கத்தியை எடுத்துக்கொள்ளலாமா?’ யோசித்தாள்.

ஆனால் அவள் யோசனைக்கு தடை செய்வது போல் கையில் வைத்திருந்த பெரிய பை தடை செய்தது. ரொம்ப கஷ்டப்பட்டு அவள் கழுத்துச் சங்கிலியையும் பற்றிக்கொண்டாள்.

‘இப்ப என்னடா பண்ணுவீங்க?’ சவால் விட்டாள்.

அடுத்த வண்டியில் இருவர் இருப்பது தெளிவாக இருந்தது. கடவுளை வேண்டிக்கொண்டாள். கொஞ்சம் தைரியம் வந்திருந்தது. யார் என்றே தெரியாமல் பின்னே திரும்பி முறைத்தாள்.

கொஞ்சம் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடம் வந்ததும் அவளுக்கு தைரியம் பிறந்தது. அப்போது வண்டியில் சென்ற இருவர் அவளையே பார்த்தது போல் இருந்தது. கொஞ்ச தூரம் போனதும் கண்காணிச்சு பின்னாடியே வந்து அறுப்பாங்களோ? திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தாள்.

“ஏய்! என்ன பண்றே? வண்டியை விட்டு இறங்கறியா? வண்டியிலேயே உட்கார்ந்து தூங்கிட்டியா?....” அதன் பிறகு அவன் பேசிய கோப வார்த்தைகளை என்னால் இங்கே சொல்ல முடியாது.

‘நானே பயந்துக்கிட்டிருக்கேன். இந்த ஆளு எதற்கு இப்படி கத்துறாரு?’ கோபத்துடன் நனவுலகுக்கு வந்தவள் சந்தோசத்தில் திளைத்தாள்.

அவள் வீட்டு வாசலில் வண்டி நின்றுகொண்டிருந்தது.

‘அப்பாடா! வீடு வந்தாச்சா? பாவிப்பயல்க நம்மை கதிகலங்க வச்சிட்டாங்கெளே. இனிமே இப்படி ராத்திரி நேரத்தில் எங்கேயும் கிளம்பக்கூடாதுப்பா. வெளிச்சத்திலேயே போயிட்டு வந்துடனும்.’ மனதில் சபதம் எடுத்துக்கொண்டாள்.

இப்போது ஏற்பட்ட நிம்மதியில் கணவனின் வசைபாடலை கூட அசட்டையாக ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அவளுக்கு வாய்த்தது திகில் அனுபவமா? த்ரில் அனுபவமா? புரியவில்லை. ஆனால் மொத்தத்தில் இந்த மாதிரி என்றுமே அவள் பயந்தது இல்லை.

இப்போது எடுத்த முடிவை அவள் பின்பற்றுவாள் என்றா நினைக்கிறீர்கள்?

சான்ஸே இல்லை. இன்று திருட்டை பற்றியே அதிகம் பேசியதால் கொஞ்சம் பயம் இருந்தது. அதனோடு அவளது கற்பனை வளமும் சேர்ந்து பாடாய் படுத்தவிட்டது.

இன்றும் கொஞ்ச நாட்களில் இந்த பயக்கதைகள் பயனற்று போகும். அன்று தன் சபதத்தை மறந்துவிடுவாள்.

நீங்க…?

சீதாவின் இயல்புக்கு கதையின் தலைப்பு .கே. இங்கே சொன்ன காட்சியமைப்புக்கு பொருத்தமாக இல்லைஎன்றால் உங்கள் பெருந்தன்மை எனக்கு தேவை. பொருத்தருள்க.

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!

This is entry #32 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.